பக்கம்:சிந்தனை வளம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. தேசிய மொழிகளும் தமிழ் நாடும்!

மொழி சம்பந்தமாகத் தமிழ் நாட்டில் மட்டுமே உள்ள சில விநோதமான நிலைமைகளைக் கவனித்தால் மிகவும் ஆச்சரியமாயிருக்கும். உலகின் மற்றெல்லாப் பகுதிகளிலும் ஒருவரை ஒரு குறிப்பிட்ட மொழியில் அறிஞர் என்று முடிவு செய்வதற்கு அவர் அந்தக் குறிப்பிட்டமொழியில் எவ்வளவு தூரம் கெட்டிக்காரர் என்பதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. ஒருவரைத் தமிழில் அறிஞர் என்று முடிவு செய்வ தற்கு முன், அவருக்கு இந்தியின் மேலும் சம்ஸ்கிருதத்தின் மேலும் வெறுப்பு உண்டா என்பதும் கவனிக்கப்பட்டு, அந்த இனம் புரியாத(?) வெறுப்புக்களும் ஃப்ளஸ் பாயிண்டு களாகக் கணக்கிடப்பட்டு எடுத்துக் கொள்ளப்படும். தமிழறிஞர் என்று முடிவு செய்வதற்குத் தமிழில் புலமை யும், பற்றும் மட்டுமே போதாது. தமிழல்லாத வேறு இந்திய மொழிகளின்மேல் வெறுப்பும் வேண்டும் இங்கே. சில ஸ்பெஷல் கேஸ்களில் தமிழ்ப் புலமை இல்லாவிட்டா லும், வேற்று மொழிகளில் உள்ள வெறுப்பே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவரைத் தமிழ் அறிஞராகக்கூட ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள் இங்கே, உண்மை. இதில் ஒரு சிறிதும் மிகையில்லை. s எங்கோ ஆருயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து பரவியிருக்கும், சந்தேகத்திற்கு இடமில்லாத அந்நிய மொழியாகிய ஆங்கிலத்தின் மேல்கூட அவ்வளவு துவேஷ மும் வெறுப்பும் இங்கு பரப்பப்படவில்லை. ஆனால், சம்ஸ்கிரு தத்தின் மேலும், இந்தியின் மேலும் பரப்பப்பட்டிருக்கிற துவேஷமும் வெறுப்பும் அதிகமானவை மட்டுமல்ல;

சி.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/151&oldid=562393" இலிருந்து மீள்விக்கப்பட்டது