பக்கம்:சிந்தனை வளம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩荡罗 சிந்தனை வளம்

இங்கு நமது தமிழில் சங்க இலக்கியங்களும், தொல் காப்பியமும் தோன்றி வளர்ந்த காலத்திலேயே அவற். ருேடு சம்ஸ்கிருத மொழியும் இருந்தது. ஆனல், சம்ஸ் கிருதம் தமிழ் வளர்ச்சிக்கு இடையூருக இருந்ததில்லை. தமிழுக்குக் கலாசாரத் தோழனுகவே இருந்திருக்கிறது. இருந்தும் அதன்மேல் வெறுப்பு. தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ்ப் படிப்புக்கும் இடையூருன, அரசியல் ஆதிக்கமாக இந்நாட்டில் இருந்த ஆங்கில மொழியின்மேல் காரணமற்ற மோசும் இன்னும் நீடிக்கிறது. யாரோ செய்த பாவத்துக்கு யாரோ தண்டனை அநுபவிக்கிரு.ர்கள். இதை என்ன வென்று விவரிப்பது?

தமிழில் நாடக இலக்கியம், அலங்கார இலக்கணம் ஆகிய துறைகளே சம்ஸ்கிருத மொழியின் கலாசாரத் தோழ மையினல் கிடைத்தவைதான். இலக்கணம், இலக்கியம், தர்க்கம், வைத்தியம் ஆகிய துறைகளில் தனித்தனியே படித்து சிரோன்மணி பட்டம் பெறத்தக்க அளவு பரந்த நூல்களின் பெருக்கம் உள்ள சம்ஸ்கிருத மொழியை வெறுப் பதன் மூலம் என்ன லாபம் என்பதுதான் புரியவில்லை. எந்த வெறுப்பும் லாபத்தைத் தர முடியாது.

நமது தேசத்துக்குரிய தேசிய மொழிகள்மேல் வெறும் பும், அதன் காரணமான தாய் மொழிப் பற்றும் வேண்டும். என்ற ஒரு நிலைமை இந்தியாவின் மற்றப் பிரதேசங்களில் இல்லாத ஒரு விசித்திரப் போக்கு ஆகும். சம்ஸ்கிருதம் சங்க காலத்திலும், அதையடுத்த காலங்களிலும் தமிழ் மொழிக்கும். தமிழ்ப் புலவர்களுக்கும் ஒர் இண்டெலக் சுவல் கம்பானியன்ஷிப்”பைத் தொடர்ந்து அளித்து வந்தி: ருக்கிறது என்பதுதான் வரலாற்று உண்மை. அதைவெறுக்க வேண்டும் என்ற மனப்பான்மை புதிதாக 1940-க்கும் 1980-க்கும் இடைப்பட்ட காலங்களில் வளர்க்கப்பட்ட புதிய வேலிக்காத்தான்’ ஆகும். வேலிக்காத்தானல்’ பாதுகாப்பைவிட நஷ்டமே அதிகம். .

சம்ஸ்கிருதத்தைப்போல் இந்தி தமிழுக்கு இணையா மொழி என்று நான் கூறமாட்டேன். ஆனலும் தமிழர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/154&oldid=562396" இலிருந்து மீள்விக்கப்பட்டது