பக்கம்:சிந்தனை வளம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 互5●

பலருக்கு அந்தத் தேசிய மொழியின்மேல் இருக்கும் வெறுப்பை நான் ஒப்புக்கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு பிரதேசத்துக்காரனும் இன்னெரு பிரதேசத்து மொழியை வெறுப்பதன் மூலம்தான் தாய்மொழிப் பற்றைக் காட்டிக் கொள்ள முடியுமானல், உத்தரப்பிரதேசத்துக்காரர்களும் தென்னிந்திய மொழிகளை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். மற்ருெரு மொழியைக் கற்பதும் கற்காமல் விடுவதும் நமது இஷ்டம் அல்லது செளகரியத்தைப் பொறுத்தது. அதில் நிர்ப்பந்தம் கூடாதுதான். எப்படி ஆதரிப்பதில் நிர்ப் பந்தம் கூடாதோ அப்படியே வெறுப்பதிலும் நிர்ப்பந்தம் கூடாது என்பது என் கருத்து. இந்தி, சம்ஸ்கிருதத்தைக் கற்பதில் நிர்ப்பந்தம் கூடாது என்று கூறப்படும் வாதத்தை ஏற்கிற அதே சமயத்தில், அவற்றைத் திட்டமிட்டுக் கண் மூடித்தனமாக வெறுப்பதிலும் நிர்ப்பந்தம் கூடாது என் பதை இங்கே நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது.

"தமில் வால்க!” என்பதுபோல் சுவரில் பிழையாக எழுதும் கண்மூடித்தனமான மொழிப்பற்ருே, இந்தி அரக்கி ஒழிக’ என்று கோஷமிடும் வறட்டுக் குரல்களோ நாகரிகமான மொழிப்பற்று ஆக முடியாது. நமக்குப் பிடிக் காத மொழியை "அரக்கி’ லம்பாடி’ என்று கூறும் வழக் கத்தை இன்று நாம் முன்னுதாரணமாகக் காட்டிவிடுவோ மானுல் நாளைக்கு நமது தாய்மொழியைப் பிடிக்காதவர் களும் இதே உதாரணத்தைக் கடைப்பிடித்து நம்மைத் திட்டத் தொடங்கிவிடக் கூடும். -

நமக்கு எதிர்த்த வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருப்ப வர்களை நாம் தெரிந்து கொள்ளாமலிருக்கவும், பழக்கப் படுத்திக் கொள்ளாமலிருக்கவும் நமக்கு உரிமை உண்டு. ஆனல் தெரிந்து கொள்ளாமலும், பழகாமலுமே, அவர்களே *அரக்கர்கள்’ என்றும் "லம்பாடிகள்’ என்றும் திட்ட ஆரம்பிப்பது கடைந்தெடுத்த காட்டுமிராண்டித்தன ஆமாகும். - -

தமிழ் நாட்டிற்கு எதிலுமே மிகைப்படுத்தும் குணம் அதிகம். பிற தேசிய மொழிகளை எதிர்ப்பதிலும்கூட இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/155&oldid=562397" இலிருந்து மீள்விக்கப்பட்டது