பக்கம்:சிந்தனை வளம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 互55

யாருடைய நிர்ப்பந்த்துக்காகவோ முடிவு செய்வது அநாகரி மானது. தமிழர்களாகிய நாம் அந்த அநாகரிகத்தைத் தவிர்க்க இனியாவது முயல வேண்டும்.

ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும், பிரெஞ்சுக் காரர்களும், ருஷ்யர்களும் தங்கள் தாய்மொழியை நேசிக் கிருர்கள். வேறு மொழிகளை வெறுப்பதில்லை. ஆங்கில மோகமும் அவர்களிடம் இல்லை.

நமக்கோ சம்ஸ்கிருதத்தின்மேல் காரணமற்ற வெறுப்பு: ஆங்கிலத்தின்மேல் காரணமற்ற மோகம். இந்தியின்மேல் எரிச்சல். தமிழ் மட்டுமே பூரணமாகத் தெரிந்தவன்மேல் இளக்காரம். ஆகவே, மிஞ்சுவது பிற மொழி வெறுப்பு மட்டும்தான். இந்தப் புரியாத்தனம் நமக்குப் பெருமை தருவதாக இல்லை என்பது என் கருத்து. ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/157&oldid=562399" இலிருந்து மீள்விக்கப்பட்டது