பக்கம்:சிந்தனை வளம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 互59・

சதவிகிதமும் சரியாகவும் நன்ருகவும் எழுதியிருந்தால் கூடத் தப்புக்களோடு சுயமாக எழுதியவனே எனக்கு மகிழ்ச்சி" தரக்கூடியவகை இருப்பான்

மிகச் சிறிய முயலைச் சரியாகக் குறி வைத்து அம்பு எய்து வீழ்த்தியவனை விட மிகப் பெரிய யானையை நோக்கிக் குறி வைத்து எய்ய முயன்று குறி தவறித் தோற்றவனேயே நான் சிறந்தவனுகக் கருதுவேன்.

ஒருவன் தவறு செய்தால் கூடச் சுயமான முயற்சியின் போது அது நேர்ந்திருக்க வேண்டும். தவறு செய்யாமல் இமிடேட் செய்கிறவனேக் காட்டிலும், ஒரிஜினலான முயற்சியில் தவறு செய்து விடுகிறவனைக் கொண்டாடலாம் என்பது என் கருத்து.

அறிவு, கலைத் துறைகளில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிற மனப்பான்மையை ஒழித்தா லொழிய மூளை வறட்சியை ஒழிக்க முடியாது.

மூளை வறட்சி இருக்கிறவரை இமிடேஷன்” குணம் தொலையப் போவதில்லை. மூளை வறட்சியின் மறு பெயர்தான் இமிடேஷன். தங்கம் எட்டாத விலையில் விற்கிற இந்நாளில் நகைகளில் வேண்டுமானல் "இமிடேஷன்'இருந்து தொலைத்து. விட்டுப் போகட்டும். -

அறிவு, கலை, இலக்கியத்துறைகளில் இமிடேஷன் கேவல மானது மட்டுமில்லை. மிக மிக அவமானகரமானது என்பதை உணரவேண்டும். ★...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/161&oldid=562403" இலிருந்து மீள்விக்கப்பட்டது