பக்கம்:சிந்தனை வளம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 1 6 լ՝

காலத்திலும் அது செலாவணியாவதற்கு இந்த இரண்டுங். கெட்டான் தேசத்தில் நிறைய ஸ்கோப்” இருக்கிறது. செலாவணி செய்யவும் நம்மவர்களுக்குச் சாமர்த்தியம். இருக்கும்.

இங்கே சில அரசியல் கட்சிகள் தங்களைச் சார்ந்திருப்ப வர்கள் நடத்தும் போராட்டங்கள், ஊர்வலங்கள், எழுதும் எழுத்துக்கள் ஆகியவற்றை மட்டும் மக்கள் இயக்கம், மக்கள் இலக்கியம், மக்கள் புரட்சி என்று தனிப் பெயர்கள் கொடுத்துச் சொல்லிக் கொள்கிருர்கள். அப்படியானல் அந்த அரசியல் கட்சிகளைச் சாராதவர்கள் எல்லாம் மக்களே. இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

டிே எடிக்கணக்கான மக்களின் தலைவியாகிய என்னைக் கேவலம் ஒரு நியாயாதிபதியோ, நீதி மன்றமோ முடிவு செய்வது இயலாத காரியம்’ என்று நீதி மன்றங்களுக்கு எதிராகக் கூலிப்பட்டாளத்தை ஊர்வலம் விட்ட தலைவர். கள் உள்ள நாடு நம்முடையது. ஜனங்களுக்கு இதுதான் சார் பிடிக்கும்!வேற வழியில்லே. இப்படி நடத்தினுல்தான் விற்கும்’ என்று வல்கார்டியை நியாயப்படுத்த ஜனங்கள் பெயரை பிளாக்மெயில் செய்யும் பத்திரிகைக்காரர்களும், இங்கேதான் இருக்கிரு.ர்கள். அவர்கள் ஜனங்களுக்கு நல்லது பிடிக்காது-பிடிக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்

டிருக்கிருர்கள்.

டிங்கிரி டிங்காலே, டொங்கிரி டொங்காலே, ஜல் ஜக்கா பல் பலே’ என்பதுபோல் அர்த்தமில்லாது.

சத்தத்தைச் சங்கீதமென்று சொல்லிப் புகுத்தி, என்ன சார் பண்றது? மக்களுக்கு இப்படித்தான் பிடிக்கும்’ என்று. மக்களை பிளாக்மெயில் செய்யும் சினிமாத் தயாரிப்பாளர் களும் இருக்கிருர்கள். தங்களை பிளாக்மெயில் செய்கிருர் களே எனக் கோபம்கூட வராத நிரந்தர சாத்வீகக் குண முள்ளவர்கள் நம்மவர்கள்.

மக்களுக்கு நல்லது பிடிக்காது’-என்பது இவர்கள்

உதட்டளவில் கூறும் வார்த்தையே தவிர எங்கே நல்லது. பிடித்துவிடுமோ?’ என்பதுதான் இவர்கள் மனத்தளவில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/163&oldid=562405" இலிருந்து மீள்விக்கப்பட்டது