பக்கம்:சிந்தனை வளம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 52 சிந்தனை வளம்

உள்ள பயமும், பதற்றமும். அந்தப் பயத்திலும் பதற்றத்

திலுமே இவர்கள் செயல்படுகிருர்கள்.

கன்ஸ்யூமர் ரெவிஸ்ட்டன்ஸ்’ என்னும் விழிப்பு உணர்ச்சியோடு மக்களிடம் தரக் குறைவைத் தட்டிக் கேட்கும் குணமும் வளராத வரை நம் நாட்டு மக்களே அரசியல்வாதி, சினிமாத் தயாரிப்பாளர், பத்திரிகைக்காரர் கள் யார் வேண்டுமானலும், எப்படி வேண்டுமானலும், எதில் வேண்டுமானலும் பிளாக்மெயில் செய்துகொண்டு தான் இருப்பார்கள். சங்கராச்சாரியாரை ஒரு வாரப்பத்திரி கைக்கு ஆசிரியராக நியமித்தால்கூட, எங்கிருந்தாவது கை யெழுத்துப் போடத் தெரியாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு காட்டுமிராண்டிப் புத்துார் ஏஜெண்டு ஜெய் மாலினியை ஏன் அட்டையில் போடவில்லை’ என்றுதான் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும். இது நம் நாட்டின் சாபக் கேடு. படிப்பு வளர்வதாகப் பள்ளி கல்லூரிகளின் எண் னிக்கையைக் காட்டி விவரம் சொல்லுகிருர்கள். இந்த வருடம் எத்தனை லட்சம் பேருக்குச் சர்டிபிகேட்’ அல்லது டிகிரி கொடுத்துவிட்டோம் என்று புள்ளி விபரம் தருகிருர் கள். எதற்கு சர்டிபிகேட் கொடுத்தார்கள்? அறிவுக்கா, அறியாமைக்கா, வளர்ச்சிக்கா, தளர்ச்சிக்கா, நாகரிகத் துக்கா, காட்டுமிராண்டித்தனத்துக்கா? பக்குவத்திற்கா? -சிறுபிள்ளை தனத்துக்கா? எதற்கென்றுதான் புரியவில்லை

நமக்கு.

தனித்தனியாக விசாரித்தால் ஒவ்வொரு மனிதனும் இமையின்மேல் தனக்குள்ள வெறுப்பை உமிழ்கிருன். 'இதெல்லாம் பிடிக்கலிங்க... ஆளு ஏதோ நிறுத்த முடியாமே பழக்கதோஷத்திலே வாங்கிக்கிட்டிருக்கேன்’ என்று பதில் வருகிறது. இதுதான் இந்திய மனப்பான்மை. ஆளுல், இதே பழக்கதோஷ இந்தியன் பலசரக்குக் கடைக்குப்போய் புளி கேட்டு, அது இல்லை என்பதற்காக முதல் நாள் வாங்கிப் பழகிய புகையிலையையோ, சிகரெட் டையோ வாங்கிவிட்டுப் புளியை மறந்துவிடுவதில்லை. புளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/164&oldid=562406" இலிருந்து மீள்விக்கப்பட்டது