பக்கம்:சிந்தனை வளம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உபசார வார்த்கைதள்!

கடந்த இருபது வருஷங்களுக்கும் மேலாகத் தமிழில் மேடைப் பேச்சு, சொற்பொழிவு, அல்லது பிரசங்கம் பிரமாதமாக வளர்ந்திருப்பதாகச் சொல்லுகிரு.ர்கள். அதை அப்படி வளர்த்து விட்ட பெருமை தங்களையே சேரும் எனப் பெருமை கொண்டாடி மகிழவும் சிலர் தயாராயிருக்கிரு.ர்கள். செயல், தொண்டு, தியாகம், உழைப்பு இவற்றை வளர்த்தவர்கள் எல்லாம் விபரம் தெரியாத பைத்தியக்காரர்களோ என்று நினைக்கும் அளவுக்குப் பேச்சை வளர்த்தவர்கள்-சற்று அதிகமாகவே, மார் தட்டிக் கொள்கிருர்கள்.

மேடைப் பேச்சு எந்த இலட்சணத்தில் வளர்ந்திருக் கிறது என்று கொஞ்சம் பார்க்கலாம். நம்மவர்கள் கையில் எந்த அபூர்வமான விஷயத்தைக் கொடுத்தாலும், அதை மிக விரைவில் formal ஆகவும், உப்புசப்பில்லாமலும் பண்ணிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அறிந்தோ அறியாமலோ அதை ஒரு சடங்காகவும், சம்பிரதாயமாக வும் பண்ணி விடுவதில் அபாயகரமானதும், தாறுமாமுனது மான ஒரு குரூர நிபுணத்துவம் நம்மவர்களுக்கு உண்டு.

நமது இந்த குரூர நிபுணத்துவத்தில் இருந்து பேச்சும் தப்பி விடவில்லை. தேவைக்கு அதிகமான சம்பிரதாயச் சொல்லலங்காரங்களும், உபசார வார்த்தைகளும் மலிந்து, பேச்சுக்கள் சாரமற்றவை ஆகி வருகின்றன. -

ஒரு படி அரிசியை வேக வைத்துச் செய்த ஒரு பொங். கலில் இருநூறு கிராம் முந்திரிப் பருப்பை வறுத்துக் கலந். தால் ருசியாகவும், பொருத்தமாகவும் இருக்கும். மாருக இருநூறு கிராம் அரிசியை வேக வைத்துவிட்டு ஒரு படி முந்திரிப் பருப்பை வறுத்துக் கலந்தால் எப்படி இருக்கும். பல தமிழ்ச் சொற்பொழிவுகள் இந்த இரண்டாவது ரகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/170&oldid=562412" இலிருந்து மீள்விக்கப்பட்டது