பக்கம்:சிந்தனை வளம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் j 6 9

தைச் சேர்ந்தவையாகவே தோன்றுகின்றன. பிரசங்கத்துக்கு எடுத்துக் கொண்ட பிரச்னை, எதற்காக மேடையேறி நிற்கிருேம் என்ற பிரக்ஞை இவற்றைவிட, எப்படிச் சம்பிர தாயமாகவும், உபசாரமாகவும் தொடங்க வேண்டும்; எவ்வாறு சம்பிரதாயமாகவும், உபசாரமாகவும் முடிக்க வேண்டும் என்பதிலேயே அதிகக் கவனம் செலுத்துகிருர் கள். பொய், புனைந்துரை, மிகைப்படுத்தல், திரித்துச் சொல்லுதல் இவற்றின் விகிதாசாரம் நாளுக்கு நாள் அதிக மாகி வருகிறது. - -

நமது ரூபாய் டி வேல்யூ" ஆகியிருப்பதை விட அதிக மாகச் சொற்கள்-அர்த்தத்தில் டீ வேல்யூ ஆவதைப் பிரசங்கங்களில் நீங்கள் தாராளமாகவே பார்க்கலாம்.

சமையற்காரர் பிடி துணியாகப் பயன்படுத்தும் துண்டு அளவுக்குச் சிறிதான ஒரு கைத்தறிக் குட்டையை எடுத்துக் கொண்டு, அண்ணன் அவர்களுக்கு இந்தக் கைத்தறி யாடையைப் பொன்னுடையாகப் போர்த்துகிறேன்' என்று உபசாரமாகச் சொல்வார்கள். ஒரு சாதாரண பூமாலையைக் கையிலெடுத்துக் கொண்டு, மைக்கைக் கடித்து முழுங்கப் போவதுபோல் அதனருகில் நெருங்கி நின்று கொண்டு , 'இந்த மலர் மாலையை அண்ணனுக்கு மாணிக்க மாலையாகச் சூடுகிறேன்’ என்பார்கள். மலர், மாணிக்கம், பொன் இதற்கெல்லாம் அர்த்தமே கிடையாது.

கைத்தறி துண்டைக் கைத்தறி துண்டாகவே கருதிப் போர்த்தில்ை என்ன கேடு வந்தது? மலர் மாலையை மலர் மாலையாகவே கருதிச் சூடினல் என்ன குடி முழுகிவிடப் போகிறது? அவற்றை ஏன் மற்றவைகளைப்போல் பாவித்துக் கொண்டு சூட வேண்டும்? நிஜமாகவே ஒரு மாணிக்க மாலையை எடுத்துக் கொண்டு வந்து, இந்த மாணிக்க மாலையை மலர் மாலையாகக் கருதி அண்ணனுக்குச் சூட்டு கிறேன்’ என்று யாராவது, அதிர்ச்சியளிக்கக் கூடிய விதத்தில் சம்பிரதாயத்தை மாற்ற மாட்டார்களா என்று எதிர்பார்த்துச் சலித்துப் போய் விட்டது எனக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/171&oldid=562413" இலிருந்து மீள்விக்கப்பட்டது