பக்கம்:சிந்தனை வளம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. மாறி வரும்

மதிப்பீடுகள்

அறிவு என்ற வார்த்தைக்கு இப்போது என்னென் னவோ விளக்கங்கள் கொடுக்கிருர்கள். ஆனல், அதற்கு முன்பு கொடுக்கப்பட்ட விளக்கம், நல்லதின் நன்மையை யும், தீயதின் தீமையையும் உள்ளவாறு உணர்வது” என்பது ஆகும்.

இதன்படி நல்லது, கெட்டது என்பவற்றைப் பிறழாமல் கண்டு பிடித்துக் காரண, காரியத்தோடு அறிவதுதான் அறிவு என்று ஆகிறது.

ஆனல், இன்று நல்லது அல்லது கெட்டதைக் கண்டு பிடிப்பதிலேயே பல குழப்பங்களும், முரண்பாடுகளும் ஏற்பட்டு விட்டன.

பலர் சேர்ந்து, கெட்டதை நல்லது போல் காட்டவும், நல்லதைக் கெட்டது போல் காட்டவும் முயலும் முயற்சிகள் இன்று அதிகம், மிகவும் அதிகம்.

வேல்யூஸ் (Walues) எனப்படும். மதிப்பீடுகள் மாறி வருகின்றன. தவறுகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்ற இறுக்கமான-சுருரான பழைய பிடிவாதம் போய்த் தவறு. கள் மன்னிக்கப்பட வேண்டியவை என்ற புதிய-நெகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தவறுகள் அங்கீகரிக்கப்பட வேண்டி யவை என்றும் ஒரு வாதம். -

இன்னும் ஒருபடி மேலே போய்ச் சில தவறுகளும் தர்மங்களே' என்று சாதிக்கும் துணிவு கூடச் சிலருக்கு வந்து விடுகிறது - வந்திருக்கிறது.

ஐந்து பேர், பத்துப் பேர் அடங்கிய சிறிது குழுவுக்கு நடுவே ஒருவன் புளுகினல் அல்லது பொய் சொன்னல் புளுகன் என்றும் பொய்யன் என்றும் குற்றம் சாட்டுகிருேம்: கண்டிக்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/176&oldid=562418" இலிருந்து மீள்விக்கப்பட்டது