பக்கம்:சிந்தனை வளம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிந்தனை வளம்

தனது வாழ்நாள் முழுவதும் பணி புரிந்து வந்த ஒரு கம்பெனி உரிமையாளரிடம் ஒய்வு பெறும்போது தன் ‘மகனுக்கு ஒரு வேலை தருமாறு கேட்டு வாங்கி, அவனே அங்கே அமர்த்துகிரு.ர். அவர் கம்பெனிக்கு விசுவாசமாக உழைத்தவர் என்ற காரணத்தால் தான் அவரது மகனுக்கு வேலை கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து மகனே தந்தையிடம் பேசும்போது, விசுவாசமாவது வெங்காய மாவது? அவர் சம்பளம் கொடுக்கிருர். நான் உழைப்பைக் கொடுக்கிறேன். விசுவாசத்தைக் கொடுக்கணும்னு அதுக்காக அவர் பதிலுக்கு எனக்கு மேலும் ஏதாவது தந்தாகனும்’ என்று எடுத்தெறிந்து பேச நேரிடுகிறது.

தந்தை, மகனின் இந்தப் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி யடைகிரு.ர். மகனே எந்த அதிர்ச்சியும் இன்றிச் சர்வ சாதாரணமாக இதைப் பேசுகிருன்.

இதிலிருந்து விசுவாசத்தைப் பற்றிய மதிப்பீடு மாறி யிருப்பதை நன்ருகப் புரிந்து கொள்கிருேம். நன்றி, விசுவாசம் இவையெல்லாம் கற்பைப் போல் புனிதமானவை என்று நினைத்து மதிப்பிடும் ஒருவரையும், அவற்றுக்கும் தனியே விலை உண்டு என்று சாதாரணமாகச் சொல்லும் ஒருவரையும் அருகருகே பார்க்கும்போது மதிப்பீட்டு "மாற்றம் புரிகிறது.

வயது எண்பத்திரண்டு ஆகி, நடமாட்டம் ஒய்ந்து தளர்ந்த பின்னும், கிழிந்த கதர் வேஷ்டியையே கட்டிக் 'கொண்டு அந்த முரட்டுத் துணி படுக்கைப் புண் வரக் காரணமாக இருந்தும், அதன் மேலுள்ள பற்றும், பிடிவாத மும், முரண்டும் தீராமல் அதையே உபயோகிக்கிருர் ஒரு தியாகி! -

'டெரிகாட்’ உபயோகப்படுத்தும் அவருடைய பேர. :னுக்கு அந்தத் தாத்தாவின் பிடிவாதம் அர்த்தமற்றதாகப் படுகிறது. ஒரு மகத்தான சுதந்திர இயக்கத்தின்போது அவர் விரதமாக மேற்கொண்ட ஒரு புனிதப் பழக்கத்தை அவருடைய பார்வையில் மதிப்பிட்டுப் பார்க்க, பேரல்ை

முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/178&oldid=562420" இலிருந்து மீள்விக்கப்பட்டது