பக்கம்:சிந்தனை வளம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 互77。

பஸ்ளில், ரயிலில், பிக்பாக்கெட் அடித்தோ, சங்கிலி, யைத் திருடியோ, அகப்பட்டுக் கொள்கிறவனைப் போலீஸ் காரர் வருவதற்கு முன்பே பிடித்தவர்கள் மூக்கு, முகம் பாராமல் அடித்து நொறுக்கி விடுகிருர்கள். ஆளுல். பகிரங்கமாகப் பொதுப் பணத்தையோ, பொதுச் சொத்தையோ கையாடி அல்லது விரயமாக்கி விட்டுப் பல. ஊழல் கமிஷன்களில் புகுந்து புறப்பட்டு மறுபடியும் மார் தட்டிக் கொண்டு தேர்தலில் வந்து நிற்கிறவனைத் தலைவன் என்றும், துயர் துடைக்கப் பிறந்த தோன்றல் என்றும் கொண்டாடுகிருர்கள். மதிப்பீட்டின் பொது அளவுகோலே புரிவதில்லை.

'தர்மம், நியாயம், தெய்வத்துக்கே பொறுக்காது சாமி, கண்ணை அவித்து விடும். வம்சம் விளங்காமல் போய் விடும். எல்லாவற்றையும் மேலே ஒருவன் பார்த்துக். கொண்டுதான் இருக்கிருன். ஆண்டவன் சும்மா விட மாட்டான்!” என்பது போன்ற பதம் கலந்த நம்பிக்கை அடிப்படையிலான முந்தைய மதிப்பீடுகளும் போய். விட்டன.

பயமோ, நம்பிக்கையோ சம்பந்தப்படாத நல்லவனுக. இருக்க வேண்டும்’ என்ற அடிப்படை நாணயத்தை மைய. மாகக் கொண்ட மதிப்பீடும் குறைந்து வருகிறது.

சுயநலத்துக்கு இப்போது புதிய வியாக்கியானங்கள் கூடத் தரப்படுகின்றன.

அதிலே என்னம்மா தப்பு: தேனிலே கைபட்டவன். சும்மாவா விடுவான்? கொஞ்சம் ருசி பார்க்கிறதிலே குறைவு, ஒண்ணுமில்லே. இல்லாதவன் நாலு காசு சேர்க்கத்தான் சேர்ப்பான். சேர்க்கட்டுமே! கூட்டிக் கழிச்சுப் பார்த்தா யார்தான் ஊழல் பண்ணலே?" என்று லஞ்சத்தை-ஊழல் வழியில் பணம் பண்ணுவதை-நியாயப்படுத்திப் பேசுவது. அதிகமாகி வருகிறது. நேற்றைய மதிப்பீடுகள் எந்த வகை. யிலும் நிலைக்கவும், நீடிக்கவும் திணறுகையில், இப்படிப் புதிய தற்காலிக மதிப்பீடுகள் கிளம்புகின்றன. அவற்றில் சில மேலோட்டமாகப் பார்த்தால் சுலபமாகவும், காலத்துக்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/179&oldid=562421" இலிருந்து மீள்விக்கப்பட்டது