பக்கம்:சிந்தனை வளம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சிந்தனை வளம்

இன்றைய நமது ஜனநாயகத்தில் அறிவுக்கும் அறிவுள் ளவர்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால், காரண காரியத்தெளி வின் தொடர்பற்ற அறிவாகவே எங்கும் நிரம்பியிருக்கிறது.

சில காரணங்களைக் கவனிப்பதே இல்லை. சில காசியங் களைக் கவனிப்பதே இல்லை. இரண்டையும் தொடர்புபடுத்தி அறிகிற தெளிவுதான் அறிவு முதிர்ச்சி. தெளிவு-அத்தகைய, தெளிவு-கிடைக்காத வரை நம்மிடம் மதிப்பீடுகள்இருக்கும். அவற்றுக்கான அடிப்படைகள் மட்டும் ஒரு சீராக இருக் காது. அடிப்படை சரியாக இல்லாத மதிப்பீடு அஸ்திவார மில்லாத கட்டிடம் போன்றதே! - ★

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/182&oldid=562424" இலிருந்து மீள்விக்கப்பட்டது