பக்கம்:சிந்தனை வளம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 82 சிந்தனை வளம்

களுக்கும், அவ்வப்போது அறிக்கைகள் விடுகிறவர்களுக்கும். தவிர்க்க முடியாத ஒரு பாசாங்காகத் தேவைப்படுகிறது.

சங்கரர், இராமானுஜர் காலம் முதல். இன்றுவரை 7ishful thinking ஆகவே ஒரு விஷயம் நிற்கிறது என்ருல் அது,

நமது ஜாதி-மதச் சீர்திருத்த லட்சியங்கள்தான் என்று சொல்ல வேண்டும். : ;

சில வேளைகளில் நான் இப்படிக்கூட நினைப்பது உண்டு. ஜாதி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பல்வேறு. வகைப் பஞ்சங்கள், நிர்வாக ஊழல்கள், இவற்றை எல்லாம் ஒழிப்பதாகச் சொல்லித்தான் ஒவ்வோர் அரசியல்வாதியும் வோட்டுக் கேட்க முடிகிறது. இவற்றை எல்லாம் ஒழிப்ப தாகச் சொல்லித்தான் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வர முடிகிறது. உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட தேதியில் இவை எல்லாமே தாமாக ஒழிந்து போய்விடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் வோட்டுக் கேட்கிற அரசியல்வாதிகள், ஆளவரும் கட்சிகள் அனைத்தும் திண் டாடித் திணறிப் போய்விட நேரிடும். அரசியல் மேடைச் சொல் வர்த்தகர்கள், சவால்விடும் வார்த்தை வியாபாரி கள், எதையாவது சீர்திருத்தப் போவதாகச் சொல்வியே. பிழைக்கும் சீர்திருத்தவாதிகள், ஆட்சியாளர்கள் எல்லாரும் அப்புறம் எதை ஒழிப்பதாகச் சவடால் அடிக்க முடியும்? இந்த ஒரு சுயநலமான வசதியைக் கருதியே இவற்றை எல்லாம் ஒரேயடியாக ஒழித்துவிடாமல் வாழ வைத்துக் கொண்டிருக்கிருர்களோ என்றுகூடத் தோன்றுகிறது. இப்படித் தோன்றுவதில் உண்மையில்லாமலில்லை.

அரண்மனை வாயிலில் உள்ள பெரிய அண்டாவில் ஒவ். வொரு குடிமகனும் ஒரு குவளை பால் விட வேண்டுமென்று அரசன் கட்டளையிட அதைக் கேட்ட மக்கள் ஒவ்வொரு வரும் எத்தனையோ ஆயிரம்,பேர் பால்விடப்போகிருர்கள். நாம் ஒருவர் மட்டும் தண்ணிர் விட்டால் அது யாருக்குத் தெரியப் போகிறது’ என்று எண்ணித் தண்ணிரையே விட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/184&oldid=562426" இலிருந்து மீள்விக்கப்பட்டது