பக்கம்:சிந்தனை வளம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 18 3

கதையாகத்தான் ஜாதி வேறுபாடுகளை ஒழிக்கும் முயற்சியும் இதுவரை இருக்கிறது. இதில் நாடு முழுவதும் பொதுவான சிரத்தையும், தனித்தனியான அசிரத்தையுமாக ஒரு முரண் பாடான நிலை நம் நாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆயிரம் பேர் அடங்கிய சபையினருக் காகப் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த ஆறு பேர் சொற்பொழி வாளர்களாக மேடையேறி நின்று பேசும்போது காட்டும் வேகமோ, ஆர்வமோ பிரசங்கம் முடிந்ததும் பேசியவர் களுக்கும் இருப்பதில்லை; கேட்பவர்களுக்கும் இருப்பதில்லை. பேசுகிறவர்கள் வேறுபாடுகளை ஒழிப்பது பற்றிப் பேசுகிருர் கள். கேட்கிறவர்கள் கேட்கிருர்கள்.

நாம், கூட்டமாக இருக்ரும் போது ஒருவர் ஜாதியைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளவோ, விசாரிக்கவோ ஆசைப்படாமல், அவர் மனித இனம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே பெருமைப்படுவது போல் பாவனை பண்ணுகிருேம். கூட்டம் கலையும்போது ஒவ்வொரு வரும் மற்றவரைப் பற்றி முதலில் அறிய விரும்பும் தகவல், "என்ன ஜாதி” என்பதுதான். மதம்’ என்பது பெரும் பாலும் பெயர்களிலேயே தெரிந்து விடுவதால் நாம் அதை அநேகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத் தவிப் பதில்லை. இப்படி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி ஜாதிப் பித்துப் பிடித்து அலையும் ஆஷாட பூதித்தனத்தை விடப் பெயர்களுடன் ஜாதிகளைச் சேர்த்துப் போட்டுக் கொண்டு கள்ளங் கபடமில்லாமல் அவற்றை வெளிப் படுத்திய பழைய தலைமுறை மனிதர்களே ஒரு வகையில் யோக்கியமானவர்களாகத் தோன்றுகிருர்கள். அவர்களிடம் ஜாதி மட்டும் தான் இருந்தது. ஜாதிப் பித்து இல்லை. நம்மிடம் ஜாதிப் பித்து இருக்கிறது. ஜாதிப் பெயர்கள் தான் இல்லை. . -

பெயிண்ட் அடிப்பவர்கள், கைகளில் இரத்தக் கறை பட்டவர்கள். தங்கள் கைகளிலிருந்து அவற்றை அகற்றும் முயற்சியில், வேறு சுத்தமான இடங்கள், துணிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/185&oldid=562427" இலிருந்து மீள்விக்கப்பட்டது