பக்கம்:சிந்தனை வளம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தனை வளம் I 85

றன. பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், என்று சலு"ை களுக்காக அரசாங்கம் அங்கீகரித்திருக்கும் பிரிவினர் தங்கள் ஜாதி-உட் பிரிவு உள்பட அனைத்தையும் எல்லா விண்ணப் பங்களிலும் கூற வேண்டியிருக்கிறது. ஆனல், இந்த அங்கீ கரிக்கப்பட்ட பிரிவில் வராத மற்றவர்களையும் ஜாதி உட் பிரிவு விவரங்கள் கூறச் சொல்லியும், எழுதச் சொல்லியும் வற்புறுத்தாத கல்வி நிறுவனங்கள் மிகமிகக் குறைவு ஒரு வேளை பழைய ஜாதிகள் வேறுபாடுகள் போனலும், அரசாங்கம் என்ற புதிய மனுவால்-ஃபார்வர்டு, பேக்வர்டு. என்ற புதிய ஜாதிகள் உண்டச்க்கப்பட்டிருக்கின்றன.

கல்வி நிறுவனங்களில், பஸ் கட்டணச் சலுகைக்கு விண்ணப்பிக்கும் சாதாரண விண்ணப்பங்களில் கூட ஜாதி கேட்கப்படுகிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் அட்மிஷனின் போது, கலகங்கள், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தும் காரியங்களில் நான் ஈடுபடமாட்டேன்-என்று மாணவர்களிடம் ஒரு டெக்ளரேஷன் வாங்கப்பட்டது. அதில் கூட ஜாதியைக் கேட்டிருந்தார்கள். இன்னொரு கல்லூரி அட்மிஷனில், எல்லா வகையிலும் தகுதி பெற்றி ருந்த ஒரு மாணவரை அட்மிஷனுக்கு ஏற்றுக் கொண்டு, அட்மிஷன் கார்டும் அனுப்பி விட்டார்கள். ஆனல் கார்டில் சிவப்பு பால்பாயிண்ட் பேளுவால் ஒரு சிறு புள்ளி இடப்பட்டிருந்தது. மாணவர் அதைக் கவனிக்கவில்லை. அட்மிஷன் கார்டுடன் காலேஜ், கவுண்டரில் பணம் கட்டப் போனவுடன், கவுண்டரில் இருந்தவர் மாணவரிடம் சிவப் புப் புள்ளியைக் காட்டிப் பணம் வாங்க மறுத்து விட்டார். மாணவர் பிரின்ஸிபாலைப் பார்த்து, நிர்வாகிகளைப் பார்த்து வாதாடி, சரியான காரணம் தெரிவிக்காத பட்சத்தில் கோர்ட்டுக்குப் போக நேரிடும்’ என்று பயமுறுத்திய பின், வேண்டா வெறுப்பாக அட்மிஷன் தரப்பட்டது. -

பின்னல் விசாரித்ததில், சில குறிப்பிட்ட ஜாதிக்காரர் களுக்கு அவர்கள் எவ்வளவு நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் அந்தக் கல்லூரியில் அட்மிஷன் தருவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார்கள் என்பது தெரிந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/187&oldid=562429" இலிருந்து மீள்விக்கப்பட்டது