பக்கம்:சிந்தனை வளம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சிந்தனை வளம்

கேட்பவர்களுக்கு எல்லாம் சிபாரிசுக் கடிதம் கொடுத்து வந்த ஒரு பிரமுகர் பச்சை, நீலம், கருப்பு என்று மூன்று மைகளில் கடிதங்கள் தருவது உண்டு. பச்சை என்பது அவரது ஜாதிக்காரர்களுக்கு மட்டும் தரப்படும். காரியம் நிறைவேறும் நிறம் அது. நீலம்’-எனக்கு ஆட்சேபணை யில்லை; ஆனால், ஆள் நம் ஜாதியில்லை’ என்பதைக் குறிக் கும். கருப்பு’ என்னைத் தொந்தரவு பண்ணுகிரு.ர்கள். கடிதம் தந்து தொலைத்திருக்கிறேன்! நீ கவலைப்படாமல் தட் டிக் கழித்து விடு'-என்று பொருள்படும். இந்தக் கடித வர்ண வேறுபாட்டின் கர்த்தாவும், ஜாதி வேறுபாடுகளை எதிர்த்து மேடையில் முழங்கியவர்தான்.

எல்லா ஜாதிகளுக்கும் பொதுவான சில பெயர்கள் உண்டு. அப்படிப் பெயர்களுக்குரியவர்களின் ஜாதியைக் கண்டு பிடிக்க, நீங்கள் இன்னுருக்கு உறவா? உங்கள் தகப்ப ஞர் பெயர் என்ன? தாத்தா பெயர் என்ன?’-என்று தந்திரமாக வலைவிரித்துக் கேட்கும் வழக்கம் இங்கு ஒரு புது வகை நாகரிகமாக இருக்கிறது. அரசியலில் வேட்பாளர் எந்த ஜாதியைச் சேர்ந்தவரோ அந்த ஜாதிக்காரர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் தான் அவர் அபேட்சை மனுப் போட வேண்டுமென்பது உன்னிப்பாகக் கவனித்து மேற்கொள்ளப் படுகிறது. சுதந்திரமடைந்து முப்பது வருஷத்துக்குப் பின்னும் இங்கே இந்த நிலைமை இன்னும் போகவில்லை. வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள். நம்பிக் கையான இடங்களில் எல்லாம் தன் ஜாதி, தன் உறவினர் களை நியமித்துக் கொள்வதில் எல்லா ஜாதிக்காரர்களுமே அக்கறை காட்டுகிருர்கள்.

ஜாதி வேறுபாடுகளை ஒழிக்கும் முயற்சிகள் மூலமாகவே, அதை முன்னே விடத் தீவிரமாக வளர்க்கும் ஒரு தேசம் உலகில் உண்டு என்ருல் அது இந்தியாதான். அதில் சந்தேகமே இருக்க வேண்டியதில்லை. -

அமெரிக்கா என்ருல் நினைவுக்கு வரும் ஜனங்கள், முதலில் அமெரிக்கர்கள் என்ற பெயரில்தான் நினைவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/188&oldid=562430" இலிருந்து மீள்விக்கப்பட்டது