பக்கம்:சிந்தனை வளம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@能。 ஆசிர்வதிக்கப்பட்ட அத்துமீறல்கள்

சுதந்திரம், ஜனநாயகம், உரிமை, சமத்துவம், சலுகை கள் என்ற பெயரில் இரட்டை அளவு கோல்கள், இரட்டை விலை, இரட்டை நிர்ணயம், இரட்டை நியாயம் என்று பல விகிதாசாரங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த நாட்டில்.

அத்து மீறல்கள் தவறு என்ற பொதுவான நியாயம் புறக்கணிக்கப்பட்டு, சில அத்து மீறல்களே அங்கீரிகத்துக் கொள்ளலாம் என்ற புது நியாயத்தை நாமே போஷித்து வளர்க்க முற்படுகிரும்.

அதிகாரத்தாலும் ஆட்சியாலும் ஆசீர்வதிக்கப்பட்ட அத்துமீறல்களும், அங்கரிக்கப்பட்ட அத்துமீறல்களும், புதுப் புது அத்துமீறல்களுக்கும், சட்ட மீறல்களுக்கும் வழி: செய்து கொடுக்கின்றன. -

தனித்தனி மனிதர்களாக விலகி ஒதுங்கி நிற்கும் போது: ஒழுங்காக இருக்க வேண்டுமென்றும், அங்கீகரிக்கப்பட்ட சட்ட நியாயங்களுக்குக் கட்டுப்பட வேண்டுமென்றும் நினைப் பவர்கள் சிலராகக் கூடி ஒன்று சேரும் போதும், கூட்டமாகக் கூடும் போதும் அத்துமீறலுக்குத் துணிவு பெறுகிருர்கள்.

ஒரு தவற்றைத் தனியாக ஒருவன் செய்தால் குற்றம். சாட்டத் தயங்காமல் சட்டமும், போலீஸும் நீதித்துறை. யும் தயாராயிருக்கின்றன. பலர் சேர்ந்து அதே தவற்றைச் செய்யும் போது சட்டமும், போலீஸும், நீதியும் முடங்கி: விடுகின்றன. -

தனி மனிதனின் அத்துமீறல்களைக் கண்டிக்கத் தயாரா யிருக்கிற சட்டமும், கூட்டத்தின் அத்து மீறல்களையும், வன்முறையையும் கண்டிக்கத் தயாராக இல்லை. இதல்ை: வளரும் சமூக அபாயங்களுக்கு நாமனைவரும் ஆளாகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/190&oldid=562432" இலிருந்து மீள்விக்கப்பட்டது