பக்கம்:சிந்தனை வளம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. மிகைப் படுத்தல் என்னும் தேசிய குணம்

நமது பிரசங்க மேடைகள், தினசரிப் பத்திரிகைகள், திரைப் படங்கள், நாடகங்கள், கதைகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் போது ஒரு நிதரிசனமான உண்மை புலப் படும். எது ஒன்றையும் ஒரளவு அல்லது முடிந்த வரை மிகைப்படுத்திச் சொல்வது என்பது நமது இரத்தத்திலேயே கலந்து போயிருக்கிறது. இன்று நேற்றில்லை. பல தலைமுறை களாகவே இந்தக் குணம் நமது பிறப்புரிமை.

பிற்காலத்தில் யாராவது இதை ஒரு குறையாகச் சொல்லி விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ அலங்கார நூலாசிரியர்கள் மிகைபடுத்திக் கூறுவதையே அன்று அதிசயோக்தி அல்லது உயர்வு நவிற்சி என்று ஒரு வகை அலங்காரமாகவே பிரித்துச் சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். -

ஆனல் அறிஞர்கள் கருத்துப்படி ஒன்றைக் குன்றக் கூறுவதும் குற்றம். மிகைபடக் கூறுவதும் குற்றம். இரண்டுமே அலங்காரங்கள் அல்ல. - .

குழாயடியில் சண்டை போடும் வாயாடிப் பெண் முதல் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் பல மேடைப் பிரசங்க அரசியல் வித்தைக்காரர்கள் வரை அனைவரையும் காக்கும் தாரக மந்திரம் மிகைபடக் கூறலே.

மிகைபடக் கூறல் மட்டும் இல்லை என்ருல் நம் நாட்டு அரசியலும், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளுமே இல்லை என்று சொல்லி விடலாம்.

இலக்கணம், அதைக் குற்றம் என்ருே அலங்காரம் என்ருே எப்படி வேண்டுமானலும் சொல்லி விட்டுப் போகட்டும் நம் நாட்டு அன்ருட வாழ்க்கைக்கு அது தேவைப்படுகிற ஒரு தேசிய குணம்’ ஆகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/195&oldid=562437" இலிருந்து மீள்விக்கப்பட்டது