பக்கம்:சிந்தனை வளம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சிந்தனை வளம்

அரசியலுக்கும், பத்திரிகைத் தொழிலுக்கும், பிரசங்கி களுக்கும் தேவையான ஒரு குணத்தை அத்தனே சுலபமாகப் போக விட்டு விடுவார்களா என்ன? ஆகவே தான், பலர் அதைக் கட்டிக் காத்துப் போற்றிப் பேணி வளர்த்து வருகிரு.ர்கள். , -

அறுபது கோடிப் பேரில் எங்காவது ஒரு மூலையில், ஏதாவது ஒர் ஊரில் யாராவது ஒருவன் பட்டினியால் சாக நேர்ந்திருக்கும். அதைப் பற்றி எதிர்க்கட்சி மேடையில் பேசுகிற பேச்சாளர், பஞ்சம் பட்டினியால் மக்கள் தெருத் தெருவாகப் பூச்சி புழுக்களைப் போலச் செத்துக் கொண்டிருக் கிருர்கள். இந்த ஆட்சியில் கேள்வி முறை இல்லை. பொது மக்களின் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பில்லை. எங்கு பார்த்தாலும் மரணம்! எங்கு திரும்பினலும் கற்பழித்தல். குற்றங்கள்’ என்று மிகைப்படுத்தி அடுக்கத் தொடங்கி விடுவார். -

சில ஆளும் கட்சித் தலைவர்களும் இதில் எதிர்க் கட்சிக் காரர்களுக்கு ஒரு சிறிதும் சளைக்காதவர்களாக இருப்பார் கள். - -

இப்போது இன்று ஏறியிருக்கும் விலைவாசிக்கு, இன்று நிகழும் கற்பழித்தல் சம்பவங்களுக்கு, பெய்து தீர்த்த மழை. யால் வந்த வெள்ளச் சேதங்களுக்கு, பெய்யாத மழையால் வந்த பஞ்சங்களுக்கு, எல்லாவற்றுக்குமே ஆறு மாதங். களுக்கு முன்பு பதவியை விட்டுப் போன முந்திய அரசுதான் காரணம் என்று துணிந்து கூறும் மிகைப்படுத்தல் நிபுணர் கள் ஆளும் கட்சியிலும் இருக்கிருர்கள்.

நம் நாட்டில் வெகு காலத்துக்கு முன்பே, உண்மையை உண்மையாக நடந்தபடியே பார்க்கிற யதார்த்த வாதிகள் குறைவு. அதனல் தான் அந்தக் காலத்திலேயே யதார்த்த வாதி வெகு ஜன விரோதி' என்ற பழமொழியே உண்டாகி வழங்கி வருகிறது. - . . . . .

நம் கதைகளையும், திரைப் படங்களையும் பொறுத்த வரை மாமியார் என்பவள் நிரந்தரமான கொடுமைக்காரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/196&oldid=562438" இலிருந்து மீள்விக்கப்பட்டது