பக்கம்:சிந்தனை வளம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சுதந்திரத்தின் எல்லேகள்!

சுதந்திரம், சர்வாதிகாரம், எதேச்சாதிகாரம், உரிகை போன்ற வார்த்தைகள் பேச்சிலும், எழுத்திலும் அதிம. மாகப் புழங்குகின்றன. பொதுமக்களுக்கும், தலைவர்களுக் கும், பிரமுகர்களுக்கும் இந்த வார்த்தைகளின் அர்த்தம் நடைமுறையில் எவ்வளவிற்குப் புரிந்திருக்கிறது என்பதைப் பூார்த்தால் மிகவும் அதிர்ச்சியாயிருக்கும்.'

ஒவ்வொருவனுடைய, அல்லது ஒவ்வொன்றினுடைய சுதந்திரமும் முடிகிற எல்லை என ஒன்றிருக்கிறது. அந்த எல்லைக்கு மேல் அது அடுத்தவனுடைய-அல்லது அடுத்ததி னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதாக முடிந்து விடும்.

பலர், கட்டுப்பாடில்லாத நிலை தான் சுதந்திரம் என்று: புரிந்து கொண்டிருக்கிருர்கள். உண்மையில், சுதந்திரமில்: லாத நிலைக்குத் தேவையானதைவிட அதிகமான கட்டுப் பாடு சுதந்திரமான நிலைக்குத்தான் தேவை. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், சுதந்திரமற்ற கட்டுப்பாடும் கேடு விளைவிக்கக் கூடியவை.

ஒவ்வொரு தனி மனிதனும், ஒவ்வொரு ஸ்தாபனமும், ஒவ்வொரு சர்க்காரும் இதுதான் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டே, சுதந்திரத்தின் எல்லையைத் தங்களை அறியா மலே கடந்து, அத்துமீறிச் சர்வாதிகாரத்தின் எல்லையை எப்படித் தொடுகிருர்கள் என்பது. மிகவும் சுவாரஸ்ய மானது.

தான் சுதந்திரமாக இருக்கிற மகிழ்ச்சி மட்டும் சிலருக்குப் போதாது. அடுத்தவனைச் சுதந்திரமாக இருக்கமுடியாமல் செய்வதன் மகிழ்ச்சியும் கூடவே வேண்டும். தான் சுதந்திர மாக இருப்பது, பிறரைச் சுதந்திரமாக இருக்க விடாதது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/200&oldid=562442" இலிருந்து மீள்விக்கப்பட்டது