பக்கம்:சிந்தனை வளம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம்" 199

இரண்டும் ஒரே ஆளிடம் இருக்க முடியும். அத்து மீறிய சுதந்திரம்தான் சர்வாதிகாரத்தின் ஆரம்பம். சர்வாதிகாரம் அங்கேதான் முளை விடுகிறது.

அடுத்தவன் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்பவன் தான் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவன். தான் சுதந்திர மாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அடுத்தவனையும் சுதந்திரமாக இருக்க விட வேண்டும். பக்குவமும், பொறுப்பு உணர்ச்சியும் இல்லாவிட்டால் இந்த எல்லைகளைக் கட்டிக் காப்பது மிகவும் சிரமம். தன் சுதந்திரத்தின் எல்லேகளை விரிவடையச் செய்து கொண்டே, அடுத்தவனு டைய சுதந்திரத்தின் எல்லைகளைக் குறுக்கி நெருக்கும் முயற் சிக்குத்தான் சர்வாதிகாரம் என்று பெயர்.

சர்வாதிகாரத்தின் சாயல்கள் பல. தான் நினைக்கிற படியே எல்லாரும் நினைத்தாக வேண்டும் என்று ஆஎண்ணுவது தன்னைப் போலவே எல்லாரும் செய்ய வேண்டும் என்று எண்ணுவது. தான் பேசுவதையே எல்லாரும் பேச வேண்டும். என்று எண்ணுவது. தன் மாதிரியே எல்லாரும் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது. . . . . . . . . . மகான்களும் கூட அப்படிச் செயல்படுவது உண்டு. ஆனால், தங்களைப் போலவே எல்லாரும் இருக்க வேண்டும். என்கிற மகான்களின் ஆசை உடனே பலிப்பதில்லை. அதே சமயம், சர்வாதிகாரிகளின் ஆசை உடனே பலித்து விடும். அன்பிற்குக் கட்டுப்படாதவர்கள் கூட அதிகாரத்திற்குக் கட்டுப்படும் நாடு இது. . . . --

உதாரணமாக, மகாத்மா காந்தி, எல்லா மக்களும் உண்மை பேச வேண்டும் என்று ஆசைப்பட்டார். எல்லா மக்களும் அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று நினைத்தார். எல்லா மக்களும் ஆடம்பரத்தைக் கடைப்

பிடிக்க வேண்டாம் என்று கூறினர். -

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அது முழுமையாகப் பலிக்கவில்லை. நல்ல விஷயங்களே ஆனாலும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு பயமுறுத்திச் சொன்னல், உடனே அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/201&oldid=562443" இலிருந்து மீள்விக்கப்பட்டது