பக்கம்:சிந்தனை வளம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 19.

போஸ்டாபீஸுக்குப் போக, ஸ்டாம்பு ஒட்ட, இதுமாதிரிக் காரியங்களைச் செய்யப் படிச்சவங்களுக்கு உடம்பு வணங் காது. இந்த வேலைக்கு ஏதாவது தேட் ஃபாரம் பெயிலான பையன்-சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சவகைக் கிடைச்சாலே போதும்’ என்று பதில் வந்தது. வேலை இல்லை என்று மறுக்கும்போது மட்டுமே பி. யூ. சி. பெரிய படிப்பு’ என்று காரணம் காட்டி மறுத்தார்களே ஒழிய வேலை இருக்கிறது. -என்ற இடங்களில் எல்லாம் பி. யூ. சி என்ன பிரமாதப் படிப்பு சார்? பி. ஏ., எம். ஏ. எல்லாம் சோத்துக்குத் தாளம் போடருங்க. ஆடிக் காத்திலே அம்மிக் குளவி பறக் கறப்பச் சருகு என்ன செய்துட முடியும்?’ என்று, பி. யூ. சி. ஒரு படிப்பே இல்லை என்பதுபோல் பதில் வந்தது. என்ன முரண்பாடு பாருங்கள்!

(1) படித்தவர்களுக்கு வேலே இல்லை என்பது ஒரு வாதம். (2) படித்தவர்கள் கடின உழைப்பு அடங்கிய வேலை -யைச் செய்யமாட்டார்கள் என்பது மற்ருெரு வாதம். (3) நாகுக்கான வேலைக்கு மட்டுமே அதிகமாகம் படித்தவர்கள் லாயக்கு என்பது மற்ருெரு வாதம், (4) குறைந்த படிப் புள்ளவர்கள் பெரிய வேலைக்கு லாயக்கில்லை என்பது இன்னொரு வாதம். சில வேலைகள் படிக்காதவர்களுக்குச் சுலபமாகத் தரப்படுகிறது. அந்த வேலைகளையே படித்த வர்கள் பெற முடிவதில்லை. படிப்பு இடைஞ்சலாகவும் இருக் கிறது; தகுதியாகவும் இருக்கிறது. -

வேலையில்லாத இளைஞர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலை வாய்ப்பு அளிக்கப் போகிருேம்’ என்று கூறிக்கொண்டே மறுபுறம், ஏற்கெனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் உத்தியோக வயதை 55-லிருந்து 58-ஆக உயர்த்துகிருேம் என்று அறிவிக் கிருர்கள். வேலையில்லாதவர்களின் தொகை இதல்ை கணிச மாகப் பெருகும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரித்தான் பள்ளிகள், கல்லூரிகள், சர்வகலாசாலை கள் என்ற மெஷின்கள் அறைத்து வெளியே தள்ளும் குவியல் குவியலான படித்த இளைஞர்களைக் காயப் போட்டுவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/21&oldid=562263" இலிருந்து மீள்விக்கப்பட்டது