பக்கம்:சிந்தனை வளம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 23

உடலுழைப்பு, செல்ஃப் எம்ப்ளாய்மெண்ட், வியா பாரம், புதிய முயற்சிகள் ஆகியவற்றில் எண்டர்ப்ரைலிங்’ ஆக இறங்குவதற்குத் துணியும் வாலிபர்கள் தென்னிந்தியா வில் மிகவும் குறைவு. நம் கல்வி முறை அவர்களை அவ்வளவு துணிந்தவர்களாகவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும் வளர்க்கவில்லை. ஆகவே, 90 சதவிகித இளைஞர்கள் உத்தியோகங்களை நம்பித்தான் படிக்கிருர்கள். படிப்பு முடி வதற்கும், உத்தியோகம் கிடைப்பதற்குமான இடைவெளி அதிகமாக அதிகமாக நகரங்களில் குழப்பம், ஈவ்டீஸிங், திருட்டு, நாகரிகமான கொலைகள், பிக்பாக்கெட், மோசடி, ஏமாற்று என்று பல தகராறுகள் பெருக வாய்ப்புண்டு. படித்த இளைஞர்களின் விரக்தி ஒரு நாட்டைப் பாழாக்கி விடும் தன்மை வாய்ந்தது.

சர்க்கார், உத்தியோக வயதை 58 ஆக்கியதன் மூலம் அந்த விரக்தி வளர்க்கப்படுமே ஒழியக் குறைவதற்கு வழி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தயவுசெய்து உடை வதற்குமுன் அணையையும் அணைக்கு முன்னுள்ள உயிர்களை ஆயும் காக்கப் பாருங்களேன். +Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/25&oldid=562267" இலிருந்து மீள்விக்கப்பட்டது