பக்கம்:சிந்தனை வளம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நா. பார்த்தசாரதி

நமது பேராசிரியர்கள் இங்கர்சாலைப்பற்றியும், சீனப் பேரறிஞன் கன்பூவியலைப் பற்றியும் மேடைகளில் பேசு, வதை மக்கள் காண்கிரு.ர்கள். 30 வயதுக்குள் ஆதிசங்கரர் பாரத நாடு முழுவதும் ஞான யாத்திரை செய்ததைப் பற்றிப் பேசுவதற்கு மறந்து விடுகிருர்கள். மிக்சிகன் பல்கலைக் கழகம் (அமெரிக்கா), ரஷ்ய லெனின்கிராடு. பல்கலைக்கழகம், போலந்தின் வார்ஸ்ா பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் காளிதாஸரின் சாகுந்தலத்தையும், சோம. தேவரின் கதாசரித் சாகரத்தையும், பவபூதியின் உத்தரராம. சரிதத்தையும் அந்தந்த நாட்டு மாணவர்கள் இந்திய இயலை (Indology) அறிவதற்காக ஆராய்ந்து கொண்டிருக். கிருர்கள். ஆனல், இன்றைய தென்னிந்திய மாணவனுக்குச் சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள் தெரிந்த அளவுக்குக் கூட, இந்திய இலக்கியத்தை வளப்படுத்திய மேற்படி மகா கவிகளைத் தெரியாது.

ஒரு தென்னிந்திய மாணவனுக்கு டெட்ராய்ட்” பற்றியும், மான்செஸ்டர் பற்றியும் தெரிந்திருக்கும். கிருஷ்ணுபுரத்துச் சிற்பங்களைப் பற்றியும், திரிகூடராசப்பர் எழுதிய அற்புதமான திருக்குற்ருலக் குறவஞ்சியைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்காது.

நம்மைப் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ளும் கல்வி போதுமான தில்லை என்பார்கள். ஆனல் நம்மைப்பற்றி: அறவே தெரிந்து கொள்ளாத கல்வி நியாயமானதில்லை. என்பேன் நான்.

கலைச் செல்வங்களான நமது சொந்தக் கோவில்களை அலட்சியப்படுத்துவது, சொந்தக் காவியங்கள், இலக்கியங், களைக் கிண்டல் செய்வது, குதர்க்கம் பேசுவது, நமது மக்களின் பழக்க வழக்கங்களை இகழ்வது, நமது தேசத்து. மொழிகளைக் கேவலப்படுத்துவது, நம்மவர்களின் கிராமீய கலாசாரத்தை அருவருப்போடு ஒதுக்கி விலக்கி-நம்மை மட்டும் உயர்வாக நினைத்துக் கொள்வது ஆகிய புதிய வறுமைகள் இன்றைய இளைஞர்களைப் பற்றியிருக்கின்றன. இதை மெல்ல மெல்லவாவது மாற்ற வேண்டும். இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/28&oldid=562270" இலிருந்து மீள்விக்கப்பட்டது