பக்கம்:சிந்தனை வளம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 27

விடில், பொதுவான வறுமையைவிட அபாயத்தை உண் டாக்கக்கூடிய வறுமைகள் ஆகும் அவை:

உழைப்பதைக் கேவலமாகவும், அவசியமற்றதாகவும் நினைக்கும் மனப்பான்மை இளைஞர்களிடையே உருவாகி வருகிறது. ஏர் பிடித்து நிலத்தை உழுகிறவனைவிட அவன் அனுப்பும் ப ண த் தி ல், வெள்ளைச் சட்டை-அரும்பு மீசை-கிருதாவுடன் சினிமாக் கொட்டகை வாசலில் வளைய வரும் அவன் மகனை ஒரு மாணவன் மதிப்புக்குரியவன் என்று நான் சொல்ல மாட்டேன்.

படிப்பு, மனத்தை இளகச் செய்து கருணை மயமாக்க வேண்டும். பிறரை மதிக்கக் கற்றுத்தர வேண்டும். கடின உழைப்பில் நம்பிக்கை கொள்ளச் செய்ய வேண்டும். முரட்டுத்தனத்தை மட்டும் கற்றுத் தருகிற படிப்பில், வெற்றுப் பிடிவாதத்தை மட்டும் கற்றுத் தருகிற படிப்பில், எங்கோ எதிலோ வறுமை இருக்கவேண்டும்.

சினிமாவில் வருகிற கனவு சீன் மாதிரி ஒட்டாமல் வாழப் பழகிக்கொண்டு வரும் இளம் தலைமுறையைப் பற்றி, நாட்டில் பொறுப்புள்ள யாரும் கவலைப்படவில்லை. சில சமயங்களில் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும், தலைவர்கள் சிலருக்குமே மாணவர்கள் இப்படி இருப்பது பிரயோஜன மாக இருக்கிறது. அவர்கள் மனத்தில் எதன் மேலாவது வெறுப்பைத் தூண்டிவிடவும்,எதற்காகவாவது பஸ்ஸையும், இரயிலையும் கொளுத்தத் துண்டி விடவும் இந்த நிலை ஏற்றதாக இருப்பதால்தானே என்னவோ இதை யாரும் lost si so (pusogov%). Poverty line, below poverty line L1 sögö gröðgvrrib GL13:S)GFGud g^gslu Cultural Iine, below cultural line பற்றிக் கவலைப்படுவதில்லை.

கவலையோடும், கவனத்தோடும் சிந்திக்கும்போது நம் நாட்டின் பொது வறுமையைவிட இந்தப் புதிய வறுமைகள் பயப்பட வைக்கின்றன. - கனத்த ஜமுக்காளத்தை ஒத்த போர்வையை மேலே போர்த்திக்கொண்டு வந்து இறங்கும், வித்தியாசமான உடைகளோடு கூடிய பல்வேறு ஆப்பிரிக்கர்கள் ஹீ த்ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/29&oldid=562271" இலிருந்து மீள்விக்கப்பட்டது