பக்கம்:சிந்தனை வளம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...} 2 நா. பார்த்தசாரதி

அந்தத் தவறுகளேயே தர்மங்களாக்க முயலுகிறவர்களுக்கு எது தவறு-எது சரி, எது தர்மம்-எது அதர்மம், எது நல்லது எது கொட்டது என்றெல்லாம் கண்டுபிடித்துப் பிரித்து -ஞாபகம் வைத்துக்கொண்டு அடையாளம் காட்டக் கூடிய வர்கள் இருப்பதே இடையூறுதான்.

புதிதாகக் கிளம்பியிருக்கும் நியூ(ட்)வேவ் கதையாளர் ஒருவரிடம், இப்படி எல்லாம் தாறுமாருக எழுதுகிறீர் களே? இதல்ை சமூகத்துக்கு என்ன பயன்?’ என்று கேட்ட போது, அந்தக் கதையாளர் கூறிய அதிர்ச்சியடையத்

தக்க பதில் வருமாறு :

ஒரு முதிய பிரெஞ்சுத் தாய், பருவம் வந்த தன் “பெண்ணைப் பார்த்து ஒரு நாள் இரவு, எனக்கு வயதாகி விட்டது இயலவில்லை. எனக்குப் பதிலாக நீயே உன் தந்தை யோடு ஏன் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது?’ என்று கேட்பதாக ஒரு நாவலில் படித்தேன். அது மாதிரி எல்லாம் பெர்மிஸிவ்' ஆக எழுதும் போல்டான காலம் இந்தப் பத்தாம்பசலி நாட்டில் எப்போது தான் வரப் போகிறதோ?’’; என்று கேட்டதோடு அமையாமல், இது தான் Bold theme என்று கூறியதாகவும் கேள்விப் பட்டேன். ' துணிச்சல்' என்ன என்பதைப் பற்றியே எனக்கு உடனே குழப்பம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகம் செய்தது. காமராஜ், காங்கிரஸ் பிளவின்போது இந்திரா காந்தியின் பக்சம் சேராமல் மறுதரப்பில் நின்றது, சுபாஷ் போஸ் இ. தே. ராணுவம் அமைத்தது, திருப்பூர்.குமரன் கொடி காக்க உயிர் நீத்தது, வாஞ்சிநாதன் வெள்ளைக்கார கலெக்டரைச் சுட்டது. கண்ணகியின் உறுதி, பாஞ்சாலியின் பழி வாங்கல்வஞ்சினம் இதெல்லாம் துணிவு இல்லையோ என்றுகூட எனக்குத் திடீரென்று சந்தேகமே வந்து விட்டது.

இந்தப் பிரெஞ்சுக் கிழவியின் விவகாரம்தான் துணிவு” என்று ஒத்துக் கொள்ளாவிட்டால் நம்மை மடி சஞ்சி’ என்று நாலு பேராகச் சேர்ந்து கொண்டு சொல்லி விடுவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/34&oldid=562276" இலிருந்து மீள்விக்கப்பட்டது