பக்கம்:சிந்தனை வளம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மண்வளம், நிலவளம், நீர்வளம், வனவளம், கடல் வளம், மலைவளம் என்றெல்லாம் அடிக்கடி பலரால் பேசப்படுகிறது. சிந்தனைவளத்தைப் பற்றியோ, சிந்தனை வறட்சியைப் பற்றியோ யாரும் பேசுவதே கிடையாது. சிந்தனையின் மேல் நம்மவர்களுக்கு அத்தனை வெறுப்புப் போலும். -

ஒரு நாட்டில் மற்றெல்லா வளங்களும் சரியாக அமையவேண்டுமானல் மக்களிடம் சிந்தனை வளம் சரியாக இருக்கவேண்டும். உண்மையான வறுமை . என்பதே அறிவின்மைதான். உண்மையான வளம் என்பதும் அறிவுதான்.

சிந்தனை வறட்சியே மற்றெல்லா வறட்சிகளுக்கும் அடிப்படை. ஏன், எதற்கு எதல்ை, எப்படி என் Др கேள்விகளை எழுப்பாமலே வாழும் சிந்தனைப் பஞ்ச நிலைமை மாறவேண்டும். அறிவும் விவாதமும் பெருக வேண்டும். ዅ.....

ஒரு கிராமத்தில் ஏதாவது அக்கிரமம் , நடந்து, யாரும் அதைக் கவனிக்காமலே விட்டு விட்டத் ஏேனென்று கேட்பாரில்லாமல் போயிற்று'.என்கிருேம். ஏனென்று கேட்பதுதான் சிந்தனை வளர்ச்சியின் அடிையாளம். - - . ஏனென்று கேட்பார் இல்லாத நிலை ജത്ര கிராமத் திற்கு மட்டுமில்லை, ஒரு நாட்டுக்கும் கூட வருவதுண்டு. புத்தி சம்பந்தமாகச் சமூகத்துக்குவரும் மனநோய்களில் மிகவும் ஆபத்தான தொத்து நோய்தான் “ஏனென்று கேட்பார் இல்லாத நிலை. சிந்திக்காத ஒருவன் மற்றவர்களும் சிந்தனை மனமற்றவர்களாகவே இருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/5&oldid=562247" இலிருந்து மீள்விக்கப்பட்டது