பக்கம்:சிந்தனை வளம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“48 நா. பார்த்தசாரதி

"வும் பாதுகாப்புக்காகவும் இதை உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிருேம்’ என்று விரைவாகக் கூறிவிட்டுத் தாங்கள் எந்த நம்பரிலிருந்து பேசுகிருேம் என்பதைப் போலீஸார் அறிய முயலு முன் தொடர்பைத் .துண்டித்து விடுவார்கள். நாட்டின் பொது மக்கள் தங்கள் இயக்கம் பண்பாடற்றது - தொல்லே தருவது - கொடுர மானது என்று புரிந்து கொண்டு விடக்கூடாது என்பதுதான் காரணம்’ என்பதாக அவர் விளக்கினர். -

பொது மக்களுக்குத் தொல்லைகளும் சிரமங்களும் தருவதற்காகவே திட்டடுட்டு நடத்தப்படும் நம்முடைய நாட்டு வேலை நிறுத்தங்கள், பந்த்கள், அர்த்தால்கள், மறியல்கள் எனக்கு நினைவு வந்தன.

மக்களிடம் பண்பாடற்றவர்கள் என்று பெயரெடுத்து விடக்கூடாதே என்பது அவர்களுடைய கவலை. எப்படி யாவது மக்களேத் தங்கள் கவனத்திற்குள்ளாக்க வேண்டும் மென்பதே நம்நாட்டு வேலை நிறுத்தக்காரர்களின் கவலை. பெண்கள் கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறினேன். பஸ்ஸுக்குள் இரண்டு இளைஞர்கள், டேய் இப்போ போயி அவ காலை மிதிச்சுட்டு அல்லது அவமேல இடிச்சுட்டு, உடனே சாரி மிஸ்!” ப்ளிஸ் எக்ஸ்க் யூஸ் மீ.” என்ருே சொல்லப் போகிறேன் பார்! உன்னலே முடியுமா?- என்று தங்களுக்குள் பேசிக் கொண்டதை என் காதால் கேட்டேன். -

வம்புக்காக ஒரு பெண்ணின் காலை மிதித்து விட்டு அல்லது இடித்துவிட்டு அவளிடம் மன்னிப்புக் கேட்பது போல நடிப்பது ஒரு பொழுதுபோக்காக மாறிப் பண் பாட்டு நெறி கெட்டு விட்ட நாடு எங்கே, சிறிய தப்புக்குக் கூட ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்கும் பண்பட்ட நாடுகள் எங்கே? -

தெரியாது செய்துவிட்ட தவறுக்காக மன்னிப்புக் கேட்பது பண்பாடு, மன்னிப்புக் கேட்பதற்காகவே தவறு செய்வது, குறும்பு அல்லது அநாகரிகம். இந்த அநாகரிகம் அல்லது காட்டுமிராண்டித்தனம் எல்லாத் துறைகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/50&oldid=562292" இலிருந்து மீள்விக்கப்பட்டது