பக்கம்:சிந்தனை வளம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சராசரி இந்தியனரின் சமூகப் பொறுப்பின்மைகள்

ஒரு நாடும் அதன் மக்களும் கட்டுப்பாடாக முன்னேற அவர்கள் எந்த அளவு சமுதாயப் பொறுப்பு உள்ளவர்களாக இருந்தார்கள், இருக்கிருர்கள், இருக்கப் போகிரு.ர்கள் என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

சுதந்திரம் அடைந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் பொறுப்பு உணர்ச்சிகளைப் பற்றி இன்னும் சிந்திக்க வேண்டிய நிலைமையில்தான் நாம் இரு க் கி ருே ம். சிந்தனையே இன்னும் முடிவடையாத நிலை.

பொது மக்களைப் பொறுப்புள்ளவர்களாக ஆக்க முடியாத தலைவர்களும், தலைவர்களைப் பொறுப்பு உள்ளவர் களாக ஆக்க முடியாத பொது மக்களும் நிறைந்த நாடாக நாம் தொடர்ந்து இருக்கிருேமோ என்கிற சந்தேகம் தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

சரியான பாதையில் சென்ருலும்கூடத் தவருன முன்னுரிமைகள், ஒரு தேசத்தையும் அதன் நிர்வாக யந்தி ரத்தையும், முடிவில் மக்களையும் பொறுப்பற்றவை யாக்கி விடப் போதுமானவை. த.வருண முன்னுரிமைகளுக்கு நமது நாடு பெயர் பெற்றதாகும்.

அதனால் இந்த முப்பதாண்டுகளில் ஒவ்வொரு துறையை யும், ஒவ்வொரு பிரதேசத்தையும், ஒவ்வொரு பிரிவையும், எவ்வளவிற்கு அதிக பட்சம் சமூகப் பொறுப்பற்றவையர்க்க் முடியுமோ அவ்வளவிற்கு ஆக்கி முடித்தாயிற்று என்று தோன்றுகிறது. மீதியிருப்பவற்றை அப்படி ஆக்கும் முயற் சியில் இப்போது ஈடுபட்டிருக்கிருேம், நமது சமூகப் பொறுப்பின்மைகள் இன்னும் தொடர் கதையாகவே இருக் கின்றன. முற்றுப் பெற்றுவிடவில்லை. தொலை தூரத்து நகரத்திலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் மறு நாள் அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/52&oldid=562294" இலிருந்து மீள்விக்கப்பட்டது