பக்கம்:சிந்தனை வளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 நா. பார்த்தசாரதி

ஓரிடத்தில் இலட்சக் கணக்கில் செலவழித்துத் தார் ரோடு போடப்படுகிறது. ரோடு போடப்பட்டு முடிந்து புதுக்கருக்கு அழிவதற்குள்ளேயே மின்சார இலாகா ஆட்கள் வந்து புது ரோட்டைக் கடப்பாரையால் தோண்டித் தங்கள் வேலை முடிந்ததும் மறுபடி மூடி விட்டுப்போய் விடுகிரு.ர்கள். வாய்க்கால் போலக் குறுக்கே ஒரு பள்ளம் உண்டாகி விடு. கிறது. அடுத்த நாள், பத்தடி தள்ளி அதே சாலேயில் இன் ைேரு பகுதியில் கார்ப்பொரேஷன் தண்ணிர்க் குழாய் வேலைக்காரர்கள் தோண்டி விட்டுத் தங்கள் வேலை முடிந் ததும் மறுபடி மூடி விட்டுப் போய் விடுவார்கள், புது ரோட்டின் குறுக்கே இன்னெரு வாய்க்கால் பள்ளமாக விழும். -

நாலைந்து நாள் தள்ளி அதேசாலையில் வேறு ஒரு பகுதியில் டெலிபோன் இலாகா கேபிள்களைப் பதிக்க ஏதாவது தோண்டலாம்.

மூன்ருவதாக.இன்னெரு வாய்க்காலும் உண்டாகி விடும். மூன்று இடங்கனில் புத்தம் புதிய சாலை பழுதாகி விடும். மூன்று துறைகளின் தனித் தனிப் பொறுப்பின்மைகள்மொத்தமான பொறுப்பின்மையாக மாறி ஒரு சாலையைப் பாதிக்கிறது. அரசு அலுவலகங்கள் சிக்கனமாக இருப் பதற்கான வழி வகைகளைக் கண்டறிய மத்திய அரசு ஒரு. கமிட்டி நியமிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

இந்தக் கமிட்டியில் இந்திய மாநிலங்களின் அடிப் படையில் இருபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இவர்கள் டெல்லியில்கூடிப் பேசி முடிவெடுக்கவே மாதா மாதம் டி. ஏ. என்ற பேரில் கால் லட்ச ரூபாய் ஊதாரித்தனமாகச் செலவழியும்.

அந்தக் கமிட்டி கலைந்து விட்டால் அப்புறம் தங்களுக்கு வேலை எதுவும் .இராதே என்று பயத்திலும், தற்காப்பு உணர்விலுமே கமிட்டி நீடித்துக் கொண்டிருக்கும். இந்திய நாடு சுதந்திரமடைந்த நாளிலிருந்து இப்படிப் பொறுப் பற்று இயங்கும் கமிட்டிகள் பல இருக்கின்றன. அவைகளைக் கலைத்து விடலாமா, வேண்டாமா என்ற சர்ச்சை எழு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/54&oldid=562296" இலிருந்து மீள்விக்கப்பட்டது