பக்கம்:சிந்தனை வளம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 53

மால்ை அதை முடிவு செய்வதற்குக்கூட அரசாங்கம் தன் வழக்கப்படி ஒரு கமிட்டியை நியமித்துவிடக்கூடும்.

இன்னும் இலட்சக்கணக்கான ஊர்களுக்கு நியாயமான குடி தண்ணிர் சுகாதார வசதிகளை நம்மால் செய்து தர இயலாமல் இருக்கும் போது, கலர் டெலிவிஷனைப் பற்றி அக்கறை காட்டி ஆராய்ந்து கொண்டிருக்கிருேம். தவருன முன்னுரிமைகள் வேறு பொறுப்பற்று இயங்குவதற்குக் காரணம் ஆகின்றன.

ஏற்றிஇறக்கும்போது துறைமுகங்களில் தரைமீது சிந்திக்கிடந்து விரயமாகும் கோதுமை, மைதா போன்ற வற்றைக் கண்டால். நாமா ஏழை நாடு என்ற சந்தேகமே வந்து விடும். பொதுப் பண்டங்களை விரயமாக்குவதிலும், வீணடிப்பதிலும் அத்தனே சிரத்தை நமக்கு,

சராசரி இந்தியனுக்குச் சமூகப் பொறுப்பின்மை என்பது பல ஆண்டுகளாகவே இரத்தத்தில் ஊறிப்போனது. தன் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக நடுத் தெருவில் குப்பையைக் கொண்டுவந்து கொட்டி விடும் அத்தனை சிரத்தையையும், அக்கறையையும் ஒவ்வொரு தனி மனிதனும் பழகிக் கொண்டிருக்கிருன் இங்கே.

சிலர் தன்னளவில் பொறுப்போடு வாழ்ந்து பொதுப் பொறுப்புக்களில் மெத்தனமாக இருக்கிரு.ர்கள். இப்படிப் பொறுப்பின்மை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெரிய நகரங்களில் தினசரி வழக்கமாகி விட்ட ஊர் வலங்களுக்காக அரசாங்க பஸ்கள் வேறு பாதைகளில் சுற்றிப்போகும்படி அனுமதிக்கப்படுகின்றன. இதல்ை ஏற்படுகிற எரி பொருள் விரயம் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. -

எல்லா சர்க்கார் அலுவலகங்களிலும் மேலேயிருந்து கீழே உள்ள ஆள்வரை யாரும் எந்தப் பிரச்னைக்கும் பொறுப் போடு பதில் சொல்வது அபூர்வம். *

ஹெட்கிளார்க்கைப்பார்த்தால், சூப்பிரிண்டெண்டைப் பாருங்கள் என்பார்கள் 'சூப்பிரிண்டெண்டைப் பார்த்தால் 'ஆடிட் செக்ஷனில் போய் விசாரியுங்கள்’ என்பார்கள்.

சி.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/55&oldid=562297" இலிருந்து மீள்விக்கப்பட்டது