பக்கம்:சிந்தனை வளம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 59

வண்டி என்ருல் குறிப்பாகக் காரை மட்டும் குறிக்காது. வாடகைக்கு வரும் ரிக்ஷா, குதிரை வண்டி அனைத்தையும் தான் குறிக்கும். எல்லோருக்கும் புரிந்த டாக்ஸியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் கேள்வி.

  • Special Rebate” grgårl sang; "Goofoff 36TGjLilo.’ என்று மொழிப் பெயர்த்தால்கூடப் புரியும். சிறப்புத் தள்ளுபடி என்று இப்போது இது மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. சிறுநீர்ப் பாசனம்', 'பெண்கள் நுகர்வோர் கூட்டுறவு” போல இதுவும் குழப்பமான பொருளையே தரு கிறது. சிறப்பையே தள்ளுபடி செய்துவிற்கிருர்களோ என்று தான் தோன்றுகிறது நமக்கு.

தமிழைப் பொறுத்தவரை, மொழி பெயர்க்கிறவர்கள் தங்கள் புலமையையும், ஆணவத்தையும், ஈகோவையும் காட்ட முயலும் போதுதான் அபத்தங்கள் அதிகமா கின்றன. புரிய வைப்பதுதான் முதன்மையானதும் முக்கிய மானதும் ஆகும்’ என்பதுதான் மொழி பெயர்ப்பாளனின் லட்சியமாக இருக்க வேண்டும். உதாரணமாக Incometax 'வருமான வரி’-இந்த மொழி பெயர்ப்பில் ஆணவமே Gigflugstóvão Lurrahiềisgir. Maritime Judiciary-Giguii தலியல் நீதிநெறி இந்த மொழிபெயர்ப்பில் படிப்பின் ஈகோ தெரிகிறது. நெய்தல் நிலநெறி நெய்தலியல் நீதி நெறி என்பது சாதாரண மக்களுக்குப் புரியாது. நெய்தல் நிலம் என்பது நீர்ப்பகுதியும், நீர்ப் பகுதியைச் சார்ந்த கரை நிலத்து வாழ்க்கையையும் கு றி க் கு ம். மாரிடைம் ஜூடிவியரி நீர்ப் பகுதியை மட்டுமே குறிக்கும்.

‘Male Members female Members’ argårugs); go றுப்பினர், பெண்ணுறுப்பினர் என்று மொழி பெயர்பப்தும், 'ரெடிமேட் ஷாப்” என்பதை ஆயத்த ஆடை அங்காடி’ என்று மொழி பெயர்ப்பதும் படு குழப்பங்கள். வார்ப்பதை களைப் பற்றிய விழிப்பு உணர்ச்சியோடு மொழிபெயர்ப்பில் ஈடுபடுவது முக்கியம். வார்த்தைகளைப் பற்றிய விழிப்பு உணர்ச்சி இருந்தால்தான் ஒருவர், சிறுநீர்ப்பாசனம், பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுக்கழகம், சிறப்புத் தள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/61&oldid=562303" இலிருந்து மீள்விக்கப்பட்டது