பக்கம்:சிந்தனை வளம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் Ꮾ 5Ꮏ

உணர்கிறவர்கள் இன்று எல்லாக் கட்சிகளிலும் இருக்கிருர் களா, அல்லது எல்லாக் கட்சிகளிலுமே இல்லையா என்று. தான் கேட்க வேண்டி வருமே ஒழிய, ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே வைத்துத் தேசபக்தியை ஆராய்வது இன்றும் இனிமேலும் சாத்தியமில்லை. -

தேசத்தின்மீது ஆத்மார்த்தமான அக்கறை கொண்ட ஒரு நகரசுத்தித் தொழிலாளி சிரேஷ்டமானவன் என்று: நினைத்து மதிக்கிற நெஞ்சுரம் இருந்தால்தான் அசல் தேச பக்தியை நிறுக்க முடியும்.

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைத் தனியாக முன் நின்று நடத்திய காரணத்தால்தான் தேசபக்தி' என்ற வார்த்தை நினைவு வந்ததும், காங்கிரஸ் (இன்றுள்ள எந்தக் காங்கிரஸ் பிரிவும் இந்த அபவாத'த்துக்குரியதில்லை) நினைவு வருகிறது.

மக்கள் தொகையில் தியாகிகள், தேசத் தொண்டர்கள் என்ற ஒரு தனிப் பிரிவினரே இருந்தனர். இன்று நிலைமை. அப்படியில்லை. பஸ்ஸின்மேல் கல்லெறிகிறவன், போலி லாரிடம் அடிபடுகிறவன் அத்தனை பேரும் தியாகிதான் இன்று.

முந்நூறு கோடி ரூபாயில் நிறைவேற்ற முடிந்த ஒரு திட்டத்தை இருநூற்றெண்பது கோடி ரூபாயில் முடித்துத் தேசத்துக்கு இருபது கோடி ரூபாய் சிக்கனப்படுத்துகிற ஒரு. இன்ஜீனியர்தான் இன்றைய தேசபக்தன். அன்று மூவர்ணக். கொடி தாங்கி பிரிட்டிஷ் போலீஸிடம் அடிபட்டு ஜெயிலுக். குப் போனவன் எவ்வளவு பெரிய தியாகியோ அவ்வளவு பெரிய தியாகி என்று கதர் அணியாத இந்த உண்மை இன்ஜி" னியரை இன்று மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாட்டின் விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி இவை குன்ருமல், இருக்கப்பாடுபடும்.ஒவ்வொரு நல்ல தொழிலாளி யும்கூட இன்று தேசபக்தன் ஆகிருன். -

தேச சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அல்லது ஈடுபட்டுச் சிறை சென்றவர்கள்தான் அன்று தேச பக்தர்கள். அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு ஒத்துழைத்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/67&oldid=562309" இலிருந்து மீள்விக்கப்பட்டது