பக்கம்:சிந்தனை வளம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 71

பிரிட்டனைப் போல் ஜனநாயகத்தின் கனிவு பூரணமாக இருக்கும் நாடுகளிலும் எளிமை இருக்கிறது. அந்தப் :பிரிட்டனிடமிருந்து விடுபட்டுச் சுதந்திர நாடான நாம் மட்டும் நமது எளிமையை எங்கே பறி கொடுத்தோம் என்பதுதான் புரியவில்லை.

வடஇந்தியத் தொழிலதிபர் ஒருவர் தமிழ் நாட்டில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரைச் சந்தித்து மாலை யணிவிக்கப் புறப்பட்டு வந்து ஏழு நாள் காத்திருந்து விட்டு ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினர். அந்த முக்கியஸ் தரை எங்கே பார்க்க முடியும், எப்போது பார்க்க முடியும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. பார்க்க விடாமல் இழுத் தடிக்கிற வரைதான் மதிப்பு இருக்கும் என்ற ஒரு பிரமை தான் இதற்கெல்லாம் காரணமாயிருக்க வேண்டும்.

தலைவர்களை ஒவராகக் கும்பிட்டுத் தொழுது உயர்த்திக் குட்டிச் சுவராக்கும் இந்நாட்டு மக்களும்கூட இதற்குக் காரணமாயிருக்கலாம். - .

தங்களை நிறையப் பேர் தேடி வருகிறபோது அவர்களைப் பாக்காமல் தட்டிக் கழித்துத் தலை கனத்துப் போவதும், தங்களை யாருமே சீந்தாத காலத்தில் தாழ்வு மனப்பான்மை யால் குன்றிக் குறுகிப் போவதும் இந்நாட்டுத் தலைவர்களில் பலருக்கு வழக்கமாயிருந்திருக்கிறது; இன்னும் இருக்கிறது. இந்நாட்டு அரசியல்வாதிகளில் பலர் பதவியும் செல்வாக்கும் இல்லாத போது சிரமப்படுவதற்குக் காரணமே, பதவியும் செல்வாக்கும் இருக்கும்போது. அவர்கள் போடும் ஆட்டம்தான். எப்போதுமே எளிமை யாக இருந்தால் கவலை இல்லை. மேட்டில் இருப்பவன் பள்ளத்தில் விழ முடியும். சம தரையில் இருப்பவன் எங்கும் விழ மாட்டான், விழ முடியாது. - . .

மக்களை ஒதுக்குவது, அவர்கள் பார்வையில் படாமல் தப்பிப்பது இவை எல்லாமே தாழ்வு மனப்பான்மையாலே வரும் வியாதிகள். .

காந்தி, நேரு, காமராஜ், மொரார்ஜி போன்ற பெரிய தலைவர்கள் (மக்களைச் சந்தித்துப் பேசுவதில்) எளிமையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/73&oldid=562315" இலிருந்து மீள்விக்கப்பட்டது