பக்கம்:சிந்தனை வளம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- சிந்தனை வளம் 75

ஒரு தெருவில் ஒரு வீட்டில் சாவு நடந்தால், பிணத்தை எரிப்பதற்காக அத்தனை வீட்டாரும் தங்கள் தங்கள் வீட்டு வாசல்களில் தத்தம் பங்காக ஐந்தாறு எருவட்டி கொண்டு வந்து அடுக்கி விடுவார்கள். பிணத்தை எடுக்கிற வரை மற்றவர்கள் வீட்டிலும் அடுப்புப் புகையாது. இறந்தவன் ஏழையாயிருந்தாலும், பணக்காரயிைருந்தாலும் இந்தக் கூட்டுத் துயரம், கூட்டு மரியாதை எல்லாம் உண்டு. திருமணம் முதலிய மகிழ்ச்சிகளிலும் இப்படி உறவு உண்டு. இயல்பாகவே கூட்டுறவைக் கிராமங்களில் கடைப்பிடிக் கிரு.ர்கள்.

கிராமத்தில் நாலு பெண்கள் குளித்துக் கொண்டிருக்கிற ஒரு படித்துறையருகே யாராவது காலிப் பயல், பெண்கள் காதில் கேட்கக் கூசும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டு நின்ருல், அந்தப் பாதை வழியாகப் போகிற எழுபது வயதுக் கிழவன்கூட அதில் இருந்து விலகி, 'நமக்கேன் வம்பு?’ என்று போகாமல் அந்தக் காலியைத் துணிந்து கண்டிப்பான், எதிர்த்து நின்று விரட்டுவான். துணிந்து விரோதித்துக் கொள்வான். -

கிராமத்தில் ஒரு தெருவில் ஒரு வீட்டில் திருடு நடந்து விட்டதாகக் குரல் கேட்டால் திருடனைப்பிடிக்கக் கிராமத்து ஆண்பிள்ளைகள் அனைவரும் கம்பு, தடிகளோடு ஓடி வருவார் கள். ஒருவருக்குச் சொந்தமான வைக்கோல் படைப்பில் தீப்பிடித்துவிட்டால் அத்தனை வீட்டுக்காரர்களும் வாளியும், குடமுமாக அதை அணைக்க ஓடிவருவார்கள்.

கிராமத்தில் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல் வந்து, அந்தத் தேர்தலுக்காக ஊரறிந்த யோக்கியன் ஒரு வனும் அயோக்கியன் ஒருவனும் நின்ருல், கட்டுப்பாடாக அனைவரும் போய் வோட்டுப் போட்டு அயோக்கியனைத் தோற்கடித்து நல்லவனைத் தேர்ந்தெடுத்து உதவுவார்கள். இங்கே நான் சொல்லுவது இருபது வருஷத்துக்கு முந்திய தமிழ்நாட்டுக் கிராமங்களைப்பற்றிய என் அனுபவ பூர்வமான கணிப்பு ஆகும். கட்சி அரசியலும், சுயநலமும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/77&oldid=562319" இலிருந்து மீள்விக்கப்பட்டது