பக்கம்:சிந்தனை வளம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நா. பார்த்தசாரதி

ஒரு முன்னறிவிப்புக்கூட இல்லாமே திடீர்னு இப்படி ஜனங்களைப் பாலுக்குத் திண்டாட விட்டா எப்பிடி? நிர்வாகத்தோட இவங்களுக்கு வர்ற சின்னச் சின்னத் தகராறுங்களுக்காகப் பொதுமக்களைத் தவிக்க விடறது எந்த வகையிலே நியாயம்?’’

பாங்க் அலுவலரின் இந்தக் கோபம்இஎனக்கும் நியாய மாகவே படுகிறது. இரண்டு பேரும் எரிச்சலோடு வேறு இடத்தில் பால் வாங்கிக் கொண்டு அவரவர் வீட்டுக்குத் திரும்புகிருேம்.

பத்து மணிக்கு ஏதோ ஒரு 'செக் கைக் கணக்கில் கட்ட அவசர அவசரமாகப் பாங்குக்குப் போகிறேன். நிறையக் கூட்டம். அத்தனை பேரும் செக்கு குகளோடு காத்திரு த்

கிருர்கள்.

"செக் கிளியரன்ஸ்-க்காக வாங்க மாட்டாங்களாம். ஸ்டிரைக்காம்.’’

-காலையில் பால் டெப்போவில் சந்தித்த அதே பாங்க் அலுவலரையும் பார்க்கிறேன். தொடர்ந்தாற்போல் மூன்று நாள் செக்'குகள் கிளியரன்ஸுக்காகப் போகாமல் தேங்கி விட்டால், எத்தனை பேருக்கு எத்தனை விதமான சிரமம் என்று நானும் மற்றவர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புலம்பியும் பயனில்லை.

நிர்வாகத்தோட இவங்களுக்கு வர்ற சின்னச் சின்னத் தகராறுங்களுக்காகப் பொதுமக்களைத் தவிக்க விடறது எந்த வகையிலே நியாயம்?’ என்று: காலையில் பால் டெப்போவுக்கு முன் அவர் திருவாய் மலர்ந்தருளிய அதே வாக்கியத்தைக்கூட அவருக்கு நினைவூட்டிப் பார்த்தேன். பயனில்லை. - - - - ஜனங்களைப் பாலுக்குத் திண்டாடவிட்ட பால்பண்ணை ஊழியர்கள்மேல் அப்போது சீறி விழுந்த அதே மனிதர், பாங்கில் தமக்கு முன்னல் பல்வேறு மக்களைத் தவிக்க விட்டுக் கொண்டிருப்பதைக் கண்ணுரக் கண்டேன். -

ஆகா! என்ன அற்புதமான சமுதாயப் பொறுப்பு இவருக்கு? தன்னைப் பாதிக்கும் ஒரு சிரமத்தின்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/8&oldid=562250" இலிருந்து மீள்விக்கப்பட்டது