பக்கம்:சிந்தனை வளம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நா. பார்த்தசாரதி

என்று நூறு குடும்பத்து ஆண்பிள்ளைகள் சும்மா இருந்து, விட்டால், இரண்டே இரண்டு தெருச் சுற்றிகள் கொள்ளை யடிப்பதைத் தொடர முடிகிறது. அப்புறம், அந்த இரண்டு. போக்கிரிகள் வரக்கூடிய நாள் என்று உத்தேசமாகத் தெரிந்த ஒரு நாளில், நான்கு முக்கியமான துணிந்த குடும் பத்து ஆண்பிள்ளைகளை லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கச் செய்து தந்திரமாகப் போலீஸில் பிடித்து ஒப் படைக்க யோசனை சொன்னேன். அப்படியே செய்து தொல் லேயை ஒழிக்க முடிந்தது. -

இன்னெரு தெருவில் திடீரென்று வீட்டு முன்புறங்களில் எல்லாம் தாறுமாருகக் குடிசைகள் முளைத்து வீட்டில் வசிப்ப வர்கள் உள்ளே போக, வெளியே வர முடியாமல் தெருவி லேயே மலஜவம் கழிக்கிற நிலைமை உருவாகிப் பல மாதங் களுக்கு அந்த நிலைமை தொடர்ந்தது. அந்தத் தெருவிலுள்ள சகல கட்சிக்காரரும் இதல்ை சிரமப்பட்டாலும்: அவர்களது. கட்சித் தலைமை இதை ஒரு பிரச்னையாக்கப் பயப்பட்டது. எல்லாக் கட்சிகளுக்கும் குடிசைவாசிகள் என்ருல் ஒரு வீக். னஸ். ஒரு பயம்.

ஒரு தேர்தலில், எலெக்ஷன் தேதியில் மழை வந்து விட்டது. படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் மழையில் யார் போய் அலைவது?-என்று சும்மா இருந்து விட்டார்கள். இந்த ஏைேதானே மனப்பான்மையால் நல்ல வேட்பாளர் ஒருவர் தோற்கடிக்கப்பட்டார். இன்னொரு தேர்தலன்று கிருத்திகையோ, தைப் பூசமோ வந்தது. பலர் வோட்டளிக்கப் போகவில்லை. 'கிருத்திகையன்னிக்கு. எலெக்ஷன் வச்சா எப்படி சார்?-என்று சும்மா இருந்து விட்டார்கள். அதே சமயம் எலெக்ஷனில் வோட்டுப் போடாமல் மிச்சம் பிடித்த நேரத்தை வைத்து, விரதமோ, நோன்போ வழிபாடோ செய்து கிருத்திகைக்காகவும் அவர் கள் எதுவும் கிழித்து விடவில்லை. சும்மா வராமல் இருப் பதற்குக் கிருத்திகை ஒரு சாக்கு. அவ்வளவுதான். கிருத். திகையையும் மதிக்காமல் தேர்தலையும் மதிக்காமல் இதென்ன தட்டிக் சழிக்கும் மனப்பான்மையோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/80&oldid=562322" இலிருந்து மீள்விக்கப்பட்டது