பக்கம்:சிந்தனை வளம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 7.

சமூகப் பொறுப்பு உள்ளவர்கள்போல் கண்டித்துப் பேசும் பல இந்தியர்கள்-தங்களைப் பாதிக்காத-பிறரைப் பாதிக் கும் காரியங்களில் எப்படி நடந்து கொள்கிருர்கள் என்று கவனித்தால் ஏமாற்றமாயிருக்கிறது. அருவெறுப்பாகக்கூட

இருக்கிறது.

தாம்பரத்திலிருந்து அமிஞ்சிக்கரையிலிருக்கும் ஒரு கல்லூரிக்குப் படிக்கச் செல்கிற மாணவன், பரீட்சை எழுத இருக்கும் ஒரு தினத்தில் மின்சார ரயில் தாமதமாகிப் பரீட்சைக்கு லேட்டாகி விடுகிறது என்று வைத்துக் கொள் வோம். நடுவழியில் ஏதோ ஒர் அரசியல் கட்சியின் ரயில் மறிப்புப் போராட்டத்தால் அந்தத் தாமதம் நேர்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். r

உடனே மாணவன் அபாரமான கோபத்தோடு, பொறுமையிழந்து இந்நாட்டையும், ரயில்களையும், அதை ஒட்டுபவர்களையும் சபிக்கிருன். ஆனால், இந்தக் கோபமும், சாபமும் எல்லாம் பாதிக்கப்பட்டவன் அவனக இருந்தால் மட்டும்தான்.

அவனே சக பிரயாணிகளோடு விடலைத்தனமான சண்டை சச்சரவுகளால் தானும், தன்கடப் பயணம் செய்யும் மாணவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிற பலத்தில், ஒவ்வொரு ஸ்டேஷனை விட்டும் ரயில் கிளம்பும்போது செயினேப் பிடித்து இழுத்து நிறுத்தி மற்றப் பிரயாணிகளுக்குத் தாமதத்தை ஏற்படுத்தி மகிழும் போது, சமூகப் பொறுப்பற்றவகிைவிடத் தயங்குவதில்லை. தான் பாதிக்கப்பட்டால் மட்டுமே சமூகப் பொறுப்புள்ள வகிைப் பதற்றமடைவதும், தான் பாதிக்கப்படாமல், பிறர் பாதிக்கப்பட்டால் அதில் மகிழ்வதும் சராசரி இந்திய மனப்பான்மையோ என்றுகூட நினைக்க வேண்டியிருக்கிறது பல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

சமூகப் பொறுப்பு இல்லாதவர்கள் இந்நாட்டின் எல்லாத்துறைகளிலும் இருக்கிருர்கள். சமீபத்திய தேர்தல் கூட்டம் ஒன்றில் ஒரு படித்த அரசியல் தலைவர் பின்வருமாறு பேசியிருக்கிரு.ர். அவருடைய பொருளாதார ஞானத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/9&oldid=562251" இலிருந்து மீள்விக்கப்பட்டது