பக்கம்:சிந்தனை வளம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so - நா. பார்த்த சாரதி

நாடுகள் தங்களை நடுநிலை நாடுகள் என்று கூறிக்கொள்வதும், தீவிர வெறுப்பு விருப்பு உள்ள, கையாலாகாதவர்கள் தங்களை நடுநிலையாளர்கள் என்று தாங்களே வர்ணித்துக் கொள்வதும் இன்று ஃபாஷனுகி வருகின்றன. நடு நிலைக்கும், கையாலாகாத்தனத்துக்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசம் என்ருலும், ஒரு நல்ல தராசில் நூலிழை வித்தியாசம்கூடக் குறைபாடுதான், தவறுதான். -

திருடனுக்கும், திருட்டுக்கு ஆளாகும் அபலைப் பெண்ணுக்கும் நடுவில், இருவரையுமே சமமாகப்" பாவிக்கும் கையாலாகாத மேதைகள் தான் இன்று நாட்டில் அதிகம் என்பது என் கருத்து. தங்களை நடுநிலையாளராக வர்ணித்துக் கொள்பவர்களும் அவர்களே.

சில கையாலாகாத்தனங்களைக்கூடச் சாமர்த்தியங்கள் போலக் காட்டிவிட முடிந்த அளவுக்குப் பாமர மக்கள் நிறைந்த நாடு இது. ஒரு தராசுக்கு இரட்டை அளவுகள் உள்ள வர்த்தகம் சரியில்லையானல், ஒரு கொள்கைக்கு இரட்டை அளவுகோல்கள் உள்ள ஆட்சிக்கும் அதே நியாயம் பொருந்தாதா என்ன?

'நடுநிலை’ என்ற தமிழ்ப் பதம் இன்று உபயோகிக்கப் படும் அர்த்தத்தில் நிறைய டெப்ரஸியேஷன் போட்டுக் கழித்துப் பார்க்கத் தெரிந்தாலொழிய நாம் ஏமாந்து போய் விடுவோம். இந்திய ரூபாயின் மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு. குறைவதுபோல் தியாகம், நேர்மை, நடுநிலை, ஒழுக்கம், நம்பிக்கை, யோக்கியதை ஆகிய பதங்களின் மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதும் நமக்குப் புரிய, வேண்டும். - -

தவணை முறையில் நம்பிக்கை, தவணை முறையில் தியாகம் தவணை முறையில் நடுநிலை, தவணை முறையில் ஒழுக்கம், தவணை முறையில் யோக்கியதை, தவணை முறையில் விசுவாசம் என்று எல்லாமே தவணை முறையில் வந்து விட்ட சுலபமான வர்த்தக நாட்களில் நாம் வாழ்கிருேம் என்பதை நினைவுபடுத்திக்கொண்டு, மனத்தைச் சமாதானம்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று சில சமாதானப் பிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/92&oldid=562334" இலிருந்து மீள்விக்கப்பட்டது