பக்கம்:சிந்தனை வளம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. மூளைச் சோம்பல்

உழைக்காமல் முடங்கியிருப்பது ஒன்று மட்டும்தான் சோம்பல் என்று பலர் நினைக்கிருர்கள். உழைப்பதற்குச் சோம்பி ஒடுங்கியிருப்பதைவிட அபாயகரமான சோம்பல் வேறு ஒன்று இருக்கிறது. முதல் வகைச் சோம்பலவிட இந்த இரண்டாம் வகைச் சோம்பலையே இன்று நாட்டில் நம்மைச் சுற்றி அதிகமாகக் காண முடிகிறது. அதிகமாக உணர முடிகிறது. அதிகமாக அறிய முடிகிறது.

சிரமப்பட்டு உழைக்கவும், செயலாற்றவும் சோம்பு வதைவிட, உழைப்பதைப் பற்றியும், அதற்குத் திட்டமிடு வதைப் பற்றியும் நினைப்பதற்கே சோம்பல் படும் நிலைமை மோசமானது. உடலின் இயங்காமையைவிட மூளையின் இயங்காமை கெடுதல்.

உடற்சோம்பலைவிட மூளைச் சோம்பல் பயங்கரமானது' உடற்சோம்பல் சரீரத்தின் மேற்பாகத்தில் தெரியும் புண்ணைப் போன்றது என்ருல், மூளைச் சோம்பல் வெளியே தெரியாத உட்பகுதியில் வரும் புற்றுநோயைப் போன்றது ஆகும்.

"ஒருவனுக்கு மூளையே இல்லை’ என்ற குற்றச்சாட்டு வேறு; மூளையிருந்தும் அவன் சோம்பியிருப்பது வேறு' மூளையில்லாதவர்களைக்கூட மன்னிக்கலாம், மூளையிருந்தும் அதைப் பயன்படுத்தாமல் சோம்பியிருப்பவர்களை மன்னிக் கவே முடியாது; மூளைச் சோம்பலை-விரக்தி, வக்ரம் ஆகிய வேறு பெயர்களாலும் சிலர் அழைக்கிருர்கள். அறியாமை தவறில்லை; ஆனால் அறிய மனமில்லாமைதான் தவறு’ என்று ஒரு வாக்கியத்தை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிருேம்.இந்த 'அறிய மனமில்லாமை”யைத்தான் 'மூளைச் சோம்பல்” என்று இங்கே நான் குறிப்பிடுகிறேன். சிரமமான, அருமையான, கடினமான எதையும் பற்றி நினைப்பதையோ, திட்டமிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/94&oldid=562336" இலிருந்து மீள்விக்கப்பட்டது