பக்கம்:சிந்தனை வளம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 9 3

வதையோ, சிந்திப்பதையோ தள்ளிப் போட்டுவிட்டுச் சும்மா இருந்து விடுகிற மனப்பான்மை நம்மிடையே அதிக மாகி வருகிறது. நாளுக்கு நாள் இந்த நோய் பீடிப்பவர் களின் தொகை கூடி வருகிறது.

மூளைச் சோம்பவின் முதல் அறிகுறி (ஸிம்ப்டம்) எல்லா வற்றிலும் விரக்தியும் சலிப்பும் அடைதல். நாம் இந்த அறி குறியைப் பலரிடம் பல சமயங்களில் எப்படி எப்படி எப்போது எப்போது காண்கிருேம் என்பதைப் பார்க்க

GŲ frt ofr?

ஒரு காலனியில் வசிக்கும் பலருள் நாலைந்து பேர் துணிந்து ஒரு கன்ஸ்யூமர் மூவ்மெண்ட் தொடங்குகிருர் கள் என்று வைத்துக் கொள்வோம். அது சம்பந்தமாக அந்த நாலைந்து பேர் அதே காலனியில் வசிக்கும் மற்ருெருவரிடம் போய் விவரிக்கும்போது, அந்த மற்ருெருவர், இப்படி ஆயிரம் பேர் ஆயிரம் மூவ்மெண்ட் தொடங்கியாச்சு சார்! எதுவுமே உருப்படலே இது மட்டுமா உருப்பட்டுடப் போவுது?பேசாமே போயி அவங்கவங்க சொந்த வேலையைப் பாருங்க!...” என்று நம்பிக்கையிழந்து சலித்துக் கொள் .கிரு.ர்.

"ஒரு விஷயம் உருப்படுமா?’ என்று முயன்று பார்க்க வும், நினைக்கவும், திட்டமிடவுமே இவருக்குச் சோம்பல். ஒன்றை முயன்று பார்ப்பதற்கு முன்பே அதில் தோற்று விடத் தயாராயிருக்கிருர் இவர். இவருடையதைப் போன்ற மூளைச் சோம்பல், தொத்து நோய் போல எங்கும் பரவு கிறது. ஒரு வெற்றியை மட்டுமல்ல, தோல்வியைக்கூட முயன்று பார்த்த பின்புதான் ஏற்க வேண்டுமே ஒழிய முயற்சி செய்யாமலே தோற்பது அவமானகரமானது. இன்று எல்லாத் துறைகளிலும் இப்படி அதற்கான முயற்சியைச் செய்யாமலே தோல்வியை ஏற்றுக்கொண்டு விடத் தயாராயிருக்கிருர்கள். ஐம்பது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரிடம் இந்த மூளைச் சோம்பல் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் என்றும் இருந்திருக்கிறது . ஆனல், இன்று இளம் தலைமுறையினரிடமும் இது தென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/95&oldid=562337" இலிருந்து மீள்விக்கப்பட்டது