பக்கம்:சிந்தனை வளம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 6 நா. பார்த்தசாரதி

வறட்சியும் மூளைச் சோம்பலுமே கணிசமாக இருக்கின்றன.

இது நாட்டின் எதிர் காலத்துக்கு நல்லதில்லை.

இந்த நம்பிக்கை வறட்சிக்குஆட்சிகளும் அரசாங்கங்களும் கூட ஓரளவுக்குக் காரணமாக இருக்கலாம். அவை தவிர்க்கப்

பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும்.

முயன்று அடைய வேண்டியதையும். கஷ்டப்பட்டுப் பெற வேண்டியதையும், பாடுபட்டு உழைத்து எய்த வேண்டியதையும் நினைப்பிலிருந்தே ஒதுக்கி வைத்து விடும் மூளைக் கோழைத்தனம் முதலில் போக வேண்டும்.

படித்தவர்களிடம்தான் இந்த மூளைக் கோழைத்தனம் அதிகமாக இருப்பதைக் காண்கிறேன். ரிக்ஷா இழுப்பவர், நிலத்தை உழுபவர், தெருவில் வரும் காய்கறிக் கூடைக்காரி இவர்களிடம் பேசினல் பதிலுக்கு நம்பிக்கையோடு பேசு கிருர்கள். படித்தவர்களிடம் எதைப்பற்றிப் பேசினலும் உடனே அவநம்பிக்கையோடு பதில் சொல்கிரு.ர்கள். சந்தே கத்தோடு பதில் சொல்கிரு.ர்கள். பயந்து பயந்து பதில் சொல்கிரு.ர்கள். அநாவசியமான பயம், அநாவசியமான அவநம்பிக்கை, அநாவசியமான சந்தேகம் எல்லாம் படித்த வர்களுக்கே சொந்தமாக இருக்கிறது. இது சரியா அது சரியா என்ற சந்தேகமும் குழப்பமும் கூடப் படித்தவர் களுக்குத்தான் அதிகமாகவருகிறது. பெரும்பாலான படிக் காதவர்களுக்கு எது சரியோ அது மட்டுமே கண்ணில் தெரி

கிறது. சரியில்லாதது எதுவும் என்றும் தெரிவதே இல்லை.

நம்பிக்கையுண்டாக்காத கல்வியால் பயனில்லை. கல்வியை விட நம்பிக்கை பெரியது. நம்பிக்கைதான் மூளைச் சோம்பலை ஒழிக்கும். வெறும் ஏட்டுக் கல்வி மூளைச் சோம்பலைத்தான் பெருக்குகிறது என்பதற்கு நிதரிசனமான பல உதாரணங்கள் இருக்கின்றன. நம்மைச் சுற்றிலுமே இருக்கின்றன. , -

அரசாங்க நிர்வாகத்தில் இருக்கும் பலர் காரியங்களையும் முடிவுகளையும் தட்டிக் கழிப்பதற்கும், தள்ளிப்போடுவதற் கும் கூட இந்த மூளைச் சோம்பல்தான் காரணம் என்று தோன்றுகிறது. - . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/98&oldid=562340" இலிருந்து மீள்விக்கப்பட்டது