பக்கம்:சிந்தனை வளம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை வளம் 97 -

நாட்டில் எதை எதையோ ஒழிக்கத் திட்டம் தீட்டிப் பணம் செலவழிக்கிருேம். மூளைச் சோம்பலை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டினல்கூட நல்லது. ஆனால், அந்தத் திட்டமே மூளைச் சோம்பலுக்குப் பலியாகி விடாமல் முதலில்பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அறுபது கோடி மக்களில் ஒரு சிலர் வினிக்காக இருப் பதை மன்னிக்கலாம். ஆனல், அறுபது கோடி மக்களில் ஒரு சிலர் மட்டும்தான் ஸினிக்’ அல்லாதவர்கள் என்கிற நிலைமையை, மன்னிக்கவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. அந்த நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே பாடுபட வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால், நம்பிக்கையும் விடாமுயற்சியுமே ஒரு நாட்டின் வளமாக மீதமிருக்கும். அந்த இரண்டின் மேலுமே படரும் நோய். தான் மூளைச் சோம்பல். முதலில் நாட்டிலிருந்தே அதை ஒழிக்க முயம்வதுதான் புத்திசாலித்தனம். ★一

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_வளம்.pdf/99&oldid=562341" இலிருந்து மீள்விக்கப்பட்டது