பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 101 என்ன புலமை! என்ன ஆகாசம் மணிக்கணக்கில், கீழே இறங்காமலே, சிறகை அடிக்காமலே, அங்கேயே நீந்துவார். குறுமுனி. மணிக்கொடி ஸதஸ், வேறு முகம் எடுக்க ஆரம்பித்தது. பூரீ சிதம்பர சுப்ரமணியன், நாங்கள் சற்று எட்ட ஒதுக்கிப் பார்க்கும் கூட்டம் உள்பட, வீட்டுக்கு இந்த எழுத்தின் உபாஸ்கர்களை அழைத்து, பாயலம் பச்சடியுடன் விசேஷ சாப்பாடு போட்டார். அடுத்து க.நா.சு. அதேபோல் விருந்து வைத்தார். துமிலன் விட்டில் நடைபெற்ற எஸ். கே. சி. பார்ட்டி யில் (ஸ்வீட், காரம், காபி) ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அவர் கேட்டுக் கொண்டபடி, வந்திருந்தவர் ஒவ் வொருவரும் எழுந்து நின்று தங்கள் பெயரைச் சொல்லிக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் முறை வந்ததும், "என் பெயர் லா. ச. ராமாமிருதம்!” என்று கூறிவிட்டு, என் பக்கலில் உட்கார்ந்திருந்த துமி லன் ஸாரைச் சற்றுப் பெருமிதத்துடன் பார்த்தேன். நான் எதிர்பார்த்த அடையாளம் அவர் கண்களில் கூடுவது காண அதைவிடக் குஷியாக இருந்தது. அப்போது அவர் புதுச் சிறுகதைகள் மட்டும் கூடிய கதைக்கோவை மாதம் ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார். "ஓஹோ, இந்த மாலம் வெளிவந்த சுமங்கல்யன்' என்கிற கதையை எழுதியவர் நீங்கள்தானா? ரொம்ப நன்றாக இருந்தது. எந்த மொழியிலிருந்து தர்ஜமா அல்லது மொழி பெயர்ப்பு தெரியவில்லை.” பலூன் முகத்தில் வெடிக்கும்விதம் எப்படி?