பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 103 சந்தேகம், வகையான தீனி. என்னென்ன பட்டுப் புட வைகள். விதவிதமான கொண்டைகள், நகை வரிசைகள், ஒரு அம்மாவின் மேக் அப் அலங்காரம்அடேயப்பா!. புதுமைப்பித்தன்: "யார் இவங்க, மாஸ்டர் விட்டலுக்கு ஸ்திரீ பார்ட்டா?” என்றதும், நாங்கள் குப்பென்று சிரித்துவிட்டு, சிரித்த காரணத்தை வெளியிட முடியாமல், திருதிருவென விழித்தது ஞாபகம் வருகிறது. இப்போ ஒன்று தெளிவாயிருக்கும். எங்களுக்குத் தீனி பிடித்தது. தீனிக்கு முன்னாலேயோ, பின்னாலேயோ இலக்கியம் எனும் பெயரில் நடந்த கூட்டம் பிடிக்க வில்லை. இந்தக் குற்ற உணர்வில், நாளடைவில், அந்தத் தீனியும் பிடிக்கவில்லை. விருந்துகளும் ஓய்ந்து போயின. எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டே ! திரும்பவும் குறிப்பிட்ட அந்த ஏழு எட்டு பேர் கடற்கரையில் சந்திக்கும் வாய்ப்புகளும் குறைந்து போயின. இரண்டாவது உலக மஹாயுத்தம், சுதந்திரப் போராட்டம், அவரவர் ப்ரச்னைகள்; ஸதஸ் கலைந்து விட்டது. ஆயினும் என் போன்றவன் நெஞ்சில் அது நட்ட விதை வீண் போகவில்லை. துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. யோசித்துப் பார்க்கிறேன். அந்தக் கடற்கரைச் சந்திப்பு கலைந்தது பேரிழப்போ? அதன் காரியம் முடிந்தது, லபியும் முடிந்தது என்றுகூட எண்ணிக் கொள்ளலாம். சந்திரோதயத்தில் என் கதை 'அபூர்வ ராகம்’ அப்போதுதான் வெளியாகியிருந்தது. பிற்பகல், எர்ரபாலு செட்டித் தெரு வழியே போய்க் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தனும் ந. பிச்சமூர்த்தியும் ஏதோ அவர்களி டையே, சுவாரஸ்யமாக, முக்கியமாகப் பேசிக்கொண்டு