பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - சிந்தாநதி எதிர்நோக்கி வருகிறார்கள். முட்டிக்கொள்கிறாற்போல் நெருங்கிய பின்தான் அவர்கள் கவனம் என் மேல் ملتقيس بستانس புதுமைப்பித்தன், வெடிப்பான அவர் சிரிப்பைச் சிரித்துவிட்டு, என்னை.அனைத்துக் கொண்டார். "ஊம், நீங்களும் நம்மவரோடு சேர்ந்தாச்சு.” பிச்சமூர்த்தி பார்த்துக்கொண்டு நிற்கிறார். மீசைக்கும், தாடிக்கும் இடையே ஒளிந்து கொண்ட புன்னகை அவருடைய மூக்குத் துண்டு, விழியோரச் சுருக்கங்களில் வெளிப்படுகிறது. அவர் பார்வையே ஆசீர்வாதம். அவ்வ ளவுதான். போய்க் கொண்டேயிருக்கிறார்கள். போய் விட்டார்கள். வண்டி வாஹனப் போக்குவரத்துக்கு இலக்காக நடுத் தெருவில் நான் நிற்பதுகூடத் தெரியாமல், நடுத்தெருவில் நிற்கிறேன். பாதம் பூமியில் இல்லை. சங்கப் பலகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டேன்.