பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ண்டவனே ! ஆண்டவனே : அபஸ்ருதிக்குப் பிராயசித்தம் உண்டோ? நீ எப்படி எங்களை ஸஹறித்துக் கொண்டிருக்கிறாய்? அப்போ உனக்கே பிராயச்சித்தம் கிடையாதா? கேட்டுக்கொண்டிருக்கும் உனக்கே இல்லா விடின், அதையே பயின்று கொண்டிருக்கும் நாங்கள் ஆவதென்ன? சொல், சொல், சொல்லேன் ! உலகினைப் படைத்து, உயிரினைப் படைத்து, உன் லீலா என்று எங்களுக்குப் போதித்து, நீயும் லீலா என்று நினைத்து, ஆனால் நீ நினைத்தது ஒன்று, நடந்தது வேறு என்று உனக்கே ஆகிவிட்டதோ! உன் பந்து உன்னையே எதிர்நோக்கி விட்டதும், உனக்கு வாயும் போச்சு, பதிலும் இல்லை. மோனத்தில் மூழ்கிவிட்டாய். உன்னை மீறியது விதியெனப் பெயர் கொண்டது. அவரவர் வினைப்படி அவரவர் விதியென மறு கணக்கும் கண்டது. என் சொல்கிறாய்? அவனன்றி ஓரணுவும் அசையாது. -இது ஒரு ஆறுதலா? சின்னஞ் சிட்டுக் குருவிகூட அவனுக்குத் தெரியாமல் ஆகாயத்தினின்று விழவில்லை. -இது பயமுறுத்தலா?