பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? ட்ரிபிள்ஸ் கிண்ணனும் நானும் அசோக் நகரிலிருந்து வட பழனிக்கு சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். டபிள்ஸ். ஸ்தூபியிலிருந்து வடபழனிக்கு த்ரு ஒரே சாலை. ஆனால் கண்ணன் என்னவோ, மடக்கி, திருப்பி, குறுக்குத் தெருவுகளில் நுழைந்து சென்றான். ட்ராஃபிக் வேளையாம். நான் நம்பவில்லை. இன்றைக்கு அவன் மூட் இப்படி என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். சைக்கிள் வெண்ணையில் வழுக்கிக்கொண்டு போயிற்று. சென்ற பாதை வெண்ணயாக இல்லை. மேடு பள்ளம், கரடு முரடு. ஆனால் கண்ணனிடம் வண்டி, வயலின் வில்லாகப் பேசிற்று. "கண்ணா, நீ சைக்கிளில் Aceதான். ரொம்ப நாளாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன்.” அவன் ஒன்றும் பூரித்துப் போகவில்லை. உங்களுக்கு சைக்கிளைப் பற்றி ஒன்றும் தெரியாது. வாஸ்தவம். ஆனால், சுட்டிக் காட்டியது பிடிக்கவில்லை. ஆனால், பையன்கள் வயது ஏறிக்கொண்டு வருகிறார்கள். சட்டென வாய்விட்டுச் சிரித்தான். "அப்பா, நினைப்பு வரது. உங்களுக்கு சைக்கிளில் பாலன்ஸ் கிடையாது, இல்லையா? ஏறுவதற்காக, இடது பக்கம் ப்ளாட்பாரம், மேடு, ஒரு கல்லையேனும் தேடிண்டு போவேளே !