பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 & சிந்தாநதி பார்த்துக் கொண்டேன். அம்மா, அம்மா, மறுபடியும் எப்பவோ? எங்களுக்கது முன்னாலேயே 249 காத்துக் கொண் டிருந்தான். "மொத்தம் மூணு நிமிஷம் தான். மாஜிஸ்ட்ரேட் டோடு வாதம் பண்ணாதீங்க. கேட்ட கேள்விக்கு உடனே ஒப்புக்கிடுங்க தெரியுதா ?” தலையை ஆட்டினோம். ஹரிக்குக் கண் துளும்பிற்று. அவனைக் கேட்டால், என்னைச் சொல்வான். நாக ராஜன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவன் எப்பவுமே அழுத்தம்தான். மொத்தத்தில் எங்கள் வயதின் இயற்கைத் தன்மை தலை காட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியே ஜிகினா. உள்ளே பிசுபிசு "Order order எல்லோரும் எழுந்து நில்லுங்கள்!” சிம்மாசனத்தில் அமர்ந்தவர் முகத்தைப் பார்த்ததும், மூவருக்குமே வயிற்றில் புளியைக் கரைத்தது. இவர் எங்கே இங்கு வந்தார். இவர் நம் தெருக் கோடியில் இருப்ப வர்னா? வேலை நேரம் போக, மிச்சத்துக்கு ஹானரரி மாஜிஸ்ட்ரேட் வேறயா? ஐயையோ! நாங்கள் திரும்பி, வீட்டைப் பார்த்த மாதிரிதான்! கத்தரிக்காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி, கட்டை குட்டையா, தன் குட்டைக்கு ஈடு செய்ய, ஜே.பியில் சாவிக் கொத்தைக் குலுக்கியபடி எகிறி எகிறி நடந்து செல்கையில், எத்தனை முறை, குள்ளா குள்ளா கோழி முட்டை, குள்ளன் பிள்ளை வாத்து முட்டை! என்று கத்தியிருக்கிறோம்! ஒரொரு சமயம் தெரு முனை யில் நின்று, எங்களைத் திரும்பிப் பார்ப்பார். பார்க்கட் டுமே! இப்போ வட்டியும் முதலுமா எங்களைப் பார்த்து விடுவார்.